அறுவைச் சிகிச்சைக் கருவிகள்![]() அறுவை சிகிச்சை உபகரணங்கள் அல்லது அறுவைசிகிச்சைக் கருவிகள் (Surgical instrument) என்பவை அறுவை சிகிச்சை செய்யப்படும்போது பயன்படுத்துவதற்கென்றே தயாரிக்கப்பட்டவை ஆகும். முக்கியமாக திசு மாற்றத்தின் போதும் அல்லது அவற்றில் ஏதேனும் குறைகள் உள்ளனவா என்பதனை அறியவும் இவை பயன்படுகின்றன. சில உபகரணங்கள் பொதுவான அறுவை சிகிச்சைகளின் போது மட்டும் பயன்படும் வகையில் உருவாக்கப்படுகிறன. மற்ற சில உபகரணங்கள் மிக முக்கியமான அறுவை சிகிச்சைகளின் போது மட்டுமே பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. உபகரணங்களுக்குப் பெயரிடும் முறை (nomenclature) அவைகள் உபயோகப்படுத்தப்படும் முறைகளின்படி (உதாரணமாக, ஹெமோஸ்டேட் (scalpel, hemostat)), அல்லது அதனைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்களைக் (உதாரணமாக, கோச்சர் ஃபோர்ப்ஸ் [1]) அல்லது மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சையுடன் தொடர்புடைய அறிவியல் பெயராக (டிரக்கோட்டமி அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவி ’டிரக்கியோடோம்’) அமைகிறது. அறுவை சிகிச்சை கையாளுதல் என்பது முறையான அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உதவியாளர்கள் (செவிலியர்கள், கதிர்வீச்சு நிபுணர்) கொண்டு நடத்துவது ஆகும்.[2] வகைபடுத்துதல்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia