அலன் போடர்![]() அலன் போடர் (அ) ஆலன் ராபர்ட் பார்டர் (Allan Robert Border) பிறப்பு: சூலை 27, 1955) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். பல துடுப்பாட்டப் போட்டிகளுக்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். இவர் ஏ. பி எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மொத்தம் 156 தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை இவரின் அணியைச் சார்ந்த ஸ்டீவ் வா முறியடித்தார்.[1] 273 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தொடர்ச்சியாக 153 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் ஆடியது இன்றளவும் முறியடிக்கப்படாத குறிப்பிடத்தக்க சாதனையாக பதிவாகி உள்ளது. இவர் இடது கை மட்டையாளராகவும் அவ்வப்போது இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 11, 174 ஓட்டங்கள் எடுத்த முதல்வீரராக சாதனை படைத்தார். இதில் 27 சதங்கள் அடங்கும். பின் இந்தச் சாதனையானது மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் பிறயன் லாறா 2005 ஆம் ஆண்டில் முறியடித்தார். இவர் தேர்வுத் துடுப்பாட்டங்களில் 27 நூறு (துடுப்பாட்டம்) அடித்தார். ஓய்வு பெறும் தருணத்தில் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் இந்தச் சாதனை 15 ஆண்டு காலங்கள் முறியடிக்கப் படாது இருந்தது. பின் சூலை, 2009 இல் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது ரிக்கி பாண்டிங் இந்தச் சாதனையை முறியடித்தார்.[2] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை ஹால் ஆஃப் ஃபேமாக அறிவித்தது.[3] ஆரம்பகால வாழ்க்கைஅலன் போடர் சூலை 27, 1955 இல் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்சில் பிறந்தார். இவரின் தந்தை ஜான் , நியூ சவுத் வேல்சில் உள்ள கிராமத்தைச் சார்ந்தவர், தாய் ஷீலா கடையின் உரிமையாளர் ஆவார்.[4] இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் நார்த் சிட்னி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். தனது பள்ளிப் படிப்பை 1972 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார்.[5][6] தொழில் வாழ்க்கை1975 முதல் 1976 ஆம் ஆண்டுகளில் இவர் விளையாடிய முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 600 ஓட்டங்களுக்கும் மேலாக எடுத்தார். அதன் பின்பான ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருமுறை நூறு ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் நியூ சவுத்து வேல்சு புளூசு அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.[7] சனவரி, 1977 ஆம் ஆண்டில் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 36 ஓட்டங்கள் எடுத்தார்.[8][9] மேலும் எதிரணியின் இறுதி மூன்று இலக்குகளை கேட்ச் பிடித்து வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்[8]. கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 159 ஓட்டங்கள் எடுத்து வீழாமலிருந்தார். செஃபீல்டு சீசன் போட்டித் தொடரில் 617 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இவரின் சராசரி 36.29 ஆகும்.[8] பின் இங்கிலாந்து சென்று ஈஸ்ட் லங்கஷயர் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி 1191 ஓட்டங்களை 56.71 சராசரியிலும், 54 இலக்குகளையும் வீழ்த்தினார். இவரின் பந்து வீச்சு சராசரி 18.60 ஆகும்.[10][11] ![]() தேர்வுத் துடுப்பாட்டம்1977 ஆம் ஆண்டில் பல வீரர்கள் உலக துடுப்பாட்ட போட்டிகள் எனும் போட்டியில் விளையாட சென்றதனால் அவர்கள் முதல்தரத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். உலக துடுப்பாட்ட போட்டிகள் என்பது கெர்ரி பேக்கர் என்பவரால் நைன் நெட் ஒர்க்ஸ் எனும் ஆத்திரேலியத் தொலைக்காட்சிக்காக நடத்தப்பட்ட தொடர் ஆகும். இதனால் ஆத்திரேலிய அணியில் வீரர்கள் தேவை ஏற்பட்டது.[13][14] போடர் பெர்த் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற மேற்கு ஆத்திரேலிய அணிக்கு எதிரான தனது அறிமுக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியில் 135 ஓட்டங்கள் எடுத்தார். பின் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணிக்கு எதுராக 114 ஓட்டங்கள் எடுத்தார்.[15] 1978-79 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் துடுப்பாட்டத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணியிடம் ஆத்திரேலொய அணி தோல்வி அடைந்து. பின் சிட்னி அரங்கத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். தனது முதல் போட்டியில் நடுக்கத்துடன் விளையாடிய இவர் மூன்று ஓட்டங்களை எடுப்பதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டார்.[15] முதல் ஆட்டப் பகுதியில் 29 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஒட்ட்ங்கள் எடுப்பதற்காக ஓடிய போது ரன் அவுட் ஆனார். அந்தப் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை.[16] சிட்னியில் நடைபெற்ற அடுத்த போட்டியில் இவர் இறுதிவரை இரு ஆட்டப்பகுதிகளிலும் விளையாடினார். அவைகள் முறையே 60 மற்றும் 45 ஓட்டங்கள் எடுத்தார். அந்தப் போட்டியிலும் ஆஷஸ் தொடரையும் ஆத்திரேலிய அணி இழந்தது.[17] அடிலெய்டுவில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 11 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் ஓர் ஓட்டங்களும் எடுத்ததால் அவரை அடுத்த போட்டியில் தேர்வு செய்யவில்லை.[13][18] அந்த ஒரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடவில்லை. அதற்கு அடுத்து ஆத்திரேலியா விளையாடிய 153 போட்டிகளிலும் இவர் விளையாடினார். பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் த்ஹ்டுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் போர்டர் மூன்றாவது வீரராகக் களம் இறங்கினார். அந்தப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். ஆத்திரேலிய அணியின் வெற்றிக்கு 382 ஓட்டங்கள் தேவைப்பட்டது. போர்டர் 105 ஓட்டங்களில் ஆட்டமிழந்த போது அந்த அணியின் மொத்த ஓட்டம் 3 இலக்குகள் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் இருந்தது. ஆனால் ஐந்து ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஆத்திரேலிய ஏழு இலக்குகளை இழந்தது. முடிவில் பாக்கித்தான் அணி 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பின் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டப் பகுதியில் 85 ஓட்டங்களும் இரன்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.[19] இரண்டாவது தேர்வுத்ன் துடுப்பாட்டத் தொடரில் 276 ஓட்டங்கள் எடுத்தார்.[20] சாதனைகள்265 தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர் தகர்த்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 50 முதல் 100 ஓட்டங்களை 63 முறையும் , 50 ஓட்டங்களுக்கும் அதிகமான ஓட்டங்களை 90 முறையும் எடுத்து சாதனை படைத்தார்.இந்தச் சாதனைகள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரால் தகர்க்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 11, 174 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். பின் இந்தச் சாதனையானது மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் பிறயன் லாறா 2005 ஆம் ஆண்டில் முறியடித்தார். தலைவராக தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் 6,623 ஓட்டங்கள் எடுத்தார்.பின் இந்தச் சாதனையான இந்தியத் துடுப்பாட்ட அணியின் விராட் கோலி மற்று தென்னாப்பிரிக்க அணியின் கிரேம் சுமித் ஆகியோரால்பின்னர் தகர்க்கப்பட்டது. தலைவராக அதிக போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனை படைத்தார். ஆனால் இது பின்னர் ஸ்டீவ் வாவினால் தகர்க்கப்பட்டது. வெளி இணைப்புகள்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia