அலிரெசா பிரூஜா
அலிரெசா பிரூஜா ( Persian: علیرضا فیروزجا, பாரசீக உச்சரிப்பு: [æliːɾezɑː fiːɾuːzˈdʒɑː]; பிறப்பு 18 ஜூன் 2003) ஈரானில் பிறந்த ஒரு பிரெஞ்சு சதுரங்க வீரர் ஆவார் . அவர் தனது 12 வயதில் ஈரானிய சதுரங்க வாகையாளர் போட்டியை வென்றார் மற்றும் 14 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். மேலும் 16 ஆண்டுகள் மற்றும் 1 மாத வயதில் 2700 ஈலோ மதிப்பீட்டை பெற்றார். மேலும் வெய் யீவிற்குப் பிறகு இவ்விலக்கை எட்டிய இரண்டாவது மிக இளைய வீரர் இவர் ஆவார். ஜூன் 2021 இல் அவரது பதினெட்டாவது பிறந்தநாளில் அவர் 2759 ஈலோ மதிப்பீட்டைப் பெற்றார் மற்றும் உலகத் தரவரிசையில் 13வது இடத்தைப் பிடித்தார். நவம்பர் 2021 இல், அவர் பிடே கிராண்ட் சுவிஸ் போட்டியை வென்றார்,இதன்மூலம் அவர் சதுரங்க வேட்பாளர்கள் போட்டி 2022 க்கு தகுதி பெற்றார். ஈரானிய அரசு, ஈரானியர்கள் இஸ்ரேலியர்களுக்கு எதிராக விளையாடவதை தடை செய்யும் நோக்கில், 2019 உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வாகையாளர் போட்டிகளில் இருந்து தனது வீரர்களை விலக்கியது. இதனால் டிசம்பர் 2019 இல், இனி ஈரானியக் கொடியின் கீழ் விளையாட மாட்டேன் என பிரூஜா அறிவித்தார். 2019 முதல், அவர் பிரான்சில் வசித்து வருகிறார். மேலும் 2021 முதல், பிரெஞ்சு கொடியின் கீழ் விளையாடி வருகிறார். ஆரம்ப கால வாழ்க்கைபிரூஜா 18 ஜூன், 2003 அன்று பாபோல், ஈரானில் பிறந்தார். [4] எட்டாவது வயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். [5] 2019 இல், பிரூஜாவும் அவரது குடும்பத்தினரும் ஈரானை விட்டு வெளியேறி பிரான்சுக்கு குடிபெயர்ந்தனர். [6] [3] அவர் பிரெஞ்சு குடியுரிமைக்கு விண்ணப்பித்து ஜூலை 2021 இல் குடியுரிமை பெற்றார். [1] [2]
|
Portal di Ensiklopedia Dunia