ஹசனின் தந்தை (அரபி: அபுல் ஹசன்) புளுதி/மண்ணின் தந்தை (அரபி: அபூ துராப்) முர்தளா ("One Who Is Chosen and Contented") இறைவனின் சிங்கம் (Arabic: Asad-ullah) சிங்கம் (அரபி: Haydar)[1] முதல் அலீ(ரலி)
முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான அலீ அவர்கள் நான்காவது கலீபாவாகப் பதவி வகித்தார். அலி ராசிதுன் கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப் பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜிய்யாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
குறிப்புகள்
↑ 1.01.11.21.31.41.5Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc.. Retrieved 2007-10-12