அலுமினியம்-இலித்தியம் கலப்புலோகம்அலுமீனியம்-லித்தியம் என்பது, பல அலுமீனிய, லித்தியக் கலப்புலோகங்களைக் குறிக்க்கும் பெயராகும். பெரும்பாலும் இவற்றுடன் செப்பு, சிர்கோனியம் ஆகிய உலோகங்களும் கலப்பது உண்டு. லித்தியம் தனிம உலோகங்களிலேயே மிகவும் குறைந்த அடர்த்தியைக் கொண்டது ஆதலால், இக் கலப்புலோகங்கள் அலுமீனியத்தைவிட அடர்த்தி குறைந்தவையாக உள்ளன. வணிக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் 2.45% வரையான லித்தியத்தைக் கொண்டிருக்கும்.[1] கலப்புலோகத்தில் இருக்கும் லித்தியம் இரு வகைகளில் கட்டமைப்பு நிறையைக் குறைக்கப் பயன்படுகிறது.
நிறை குறைவானவையாக இருப்பதனால், அலுமீனிய-லித்தியக் கலப்புலோகங்கள் முக்கியமாக விண்வெளித் தொழில் துறைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை தற்போது சில ஜெட் வானூர்திகளின் சட்டகங்களில் பயன்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு நிலைப்படி, அமெரிக்க விண்வெளி ஓடங்களின் வெளித் தாங்கி முக்கியமாக அலுமீனிய-லித்தியக் கலப்புலோகத்தினாலேயே உருவாக்கப்படுகின்றது. மேற்கோள்களும் குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia