அலுமினியம் டையைதரசன் பாசுபேட்டு
அலுமினியம் டையைதரசன் பாசுபேட்டு (Aluminium dihydrogenphosphate) என்பது Al(H2PO4)3.xH2O என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள x = 0 அல்லது 3 ஆக் இருக்கும். இவை வெண்மை நிறங்கொண்ட திண்மங்களாகும். சூடுபடுத்தும்போது இவை ஒரு தொடர் வரிசையில் தொடர்புடைய பாலிபாசுபேட்டு உப்புகளாக மாறுகின்றன. அலுமினியம் டிரைபாசுபேட்டு (AlH2P3O10.2H2O), அலுமினியம் எக்சாமெட்டாபாசுபேட்டு (Al2P6O18), அலுமினியம் டெட்ராமெட்டாபாசுபேட்டு (Al4(P4O12)3) உள்ளிட்டவை அத்தொடர்வரிசை சேர்மங்களில் சிலவாகும். இந்த உப்புகளில் சில தீயணைப்பு மற்றும் சிறப்புக் கண்ணாடிகளில் உட்கூறுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன[2]. நான்முக டையைதரசன் பாசுபேட்டு ஈந்தணைவிகளால் இணைக்கப்பட்ட எண்முக Al3+ மையங்கள் இவற்றின் கட்டமைப்பில் உள்ளதாக எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டையைதரசன் பாசுபேட்டு ஈந்தணைவிகள் ஒற்றை ஈதல் பிணைப்புச் சேர்மமாக Al3+ அயனியுடன் பிணைந்துள்ளன[3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia