அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ்அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ் (Aleksandr Aleksandrovich Mikhailov) (ஏப்பிரல் 26 (N.S. date, ஏப்பிரல் 14 O.S.), 1888, மோர்சான்சுகு - செப்டம்பர் 29, 1983) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் சோவியத் அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் ஆவார். இவர் 1947 முதல் 1982 வரை புல்கோவோ வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1964 வரை அதன் இயக்குநராக இருந்து இலெனின்கிராது வீழ்ச்சிக்குப் பிறகான போருக்குப் பிந்திய புத்துயிர்ப்புக்கு வித்திட்டவரெனப் பெயர்பெற்றார்.[1]|access-date=2017-03-26 |archive-date=2005-01-24 |archive-url=https://web.archive.org/web/20050124062344/http://neopage.nm.ru/ENG/GENERAL/p05.htm |url-status=dead }}</ref>
இவரது முதல் ஆய்வுரைகளில் ஒன்று ஆல்லே வால்வெள்ளி பற்றியமைந்தது.[2] இடுக்கண்ணாக, ஜோசப் சுடாலின் புல்கோவோ வான்காணகத்தை இடிக்க ஆணையிட்டதுபோலவே, மீண்டும் மீள்கட்டமைக்கவும் ஆணையிட்டார். அதை 1954 இல் மீண்டும் திறக்கவைப்பதில் மீகைலோவ் முதன்மையான பாத்திரம் வகித்தார். அதன் ஆய்வு நோக்கம் கதிர்வீச்சு வானியல் கருவிகளைப் பயன்படுத்தி சூரியச் செயல்பாட்டு ஆய்விலும் பிற திட்டங்களிலும் ஈடுபடுவது ஆகும்.[3] மீகைலோவின் வானியல் தலைப்புகள் குறித்த கருத்துகள் அவரது வாழ்நாள் முழுவதும் கோரிப் பெறப்பட்டன. காலம் ( Time) இடழின் கட்டுரை ஒன்றில் உலூனா 3 எனும் சோவிய நிலாத் தேட்டக் கலம் புவிக்கு வானொலி அலைத் தொடர்புவழி பெறப்பட்ட நிலாத்தரையின் ஒளிப்படங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவர் ஒரு நேர்காணலில் "நிலாத் தேட்டத்தின் அடுத்த படிநிலை, கருவிகளுக்கு ஊறுகள் ஏதும் நேராமல் அங்கு ஓர் நகரும் ஊர்தியை தரையிறக்கம் செய்வதே." எனக் கூறியுள்ளார்[4] அதே ஆண்டில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நிகழும் பனிப்போரால் தூண்டப்பட்டுள்ள விண்வெளிப்போட்டி பற்றி அதே ஆண்டு ஜனவரியில் கேட்டபோது அவர் ஆட்கள் செல்லும் விண்வெளித் தேட்டத்தின் "மிகப்பெரும் சிக்கல் என்னவென்றால், அவர்கள் பாதுகாப்போடு திரும்புவதே" என காலம் ( Time)) இதழின் பேட்டியாளரிடம் கூறியுள்ளார் மேலும் " அவர்கள் பாதுகாப்பாக உயிரோடு திரும்பும் உறுதிப்பாடில்லாமல் நாங்கள் ஆட்களை அனுப்பும் இன்னலை ஏற்க விரும்பவில்லை" எனவும் வற்புறுத்துகிறார்.[5] இவர் வானியல் பணியைத் தவிர்த்து, பல அறிவியல் நூல்களை உருசியத்தில் மொழிபெயர்த்தார். இவர் திறந்த மனமும் நேர்மையும் வாய்ந்தவர். மற்றவரிடமும் அந்த நிலையை வேண்டினார்."[2] சொந்த வாழ்க்கையும் தகைமையும்இவர் 1946 இல் சிதென்கா ஜே, காத்லாவை மணந்தார். காத்லாவும் அதே வான்காணகத்தில்பணிபுரிந்து நிலாவைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இவர் ஒளியியல் கருவிகள்பால் ஈர்ப்புடையவர். இவர் ஏராளமான ஒளிப்படக் கருவிகளைத் திரட்டி வைத்திருந்தார். இவர் இசை, இலக்கியம், கலைகளில் ஈடுபாடும் புலமையும் வாய்ந்திருந்தார்.[2] இவர் வான்காணகத்தில் அமைந்த தன் வீட்டில் இறந்தார்.[2] இலியூத்மிலா சுராவ்லியோவா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள் 1910 மீகைலோவ் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. இது ஒரு முதன்மைப் பட்டைக் குறுங்கோளாகும்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia