அலெக்சாந்தர் மெர்வர்ட்டு
அலக்சாந்தர் மிக்கைலோவிச் மெர்வர்ட்டு (Alexander Mikhailovich Mervart) (உருசியம்: Александр Михайлович Мерварт) (1884 - 1932), உருசிய நாட்டு இந்தியவியலாளரும் மொழியியாளரும் திராவிடவியலாளரும் ஆவார். உருசியாவின் முதல் திராவிட மொழியிலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.[1] இவர் 1913 ஆம் ஆண்டில் மனிதவியல் மற்றும் இனவியல் துறையின் இந்தியக் கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1914-1918 ஆண்டுகளில், இவரும் இவர் துணையரும் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர், தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா தொடர்பான கலை மற்றும் பண்பாட்டுப் பொருட்களை சேகரித்தனர்.[2] லெனின்கிரேடு நகருக்கு திரும்பியபின் லெனின்கிரேடு மாநில பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் உருசிய நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பாடத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1926-1929 ஆண்டுகளுக்கிடையான காலகட்டத்தில் இருபது அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia