அலைக்கற்றை எஸ். பாண்ட்

எசு. அலைப்பட்டை (S-Band) என்பது 2 முதல் 4 கிகா எர்ட்சு அலைவெண் வரை உள்ள கதிர்நிரல் பகுதியைக் குறிப்பதாகும். இது அலைபேசி தொலைத்தொடர்புக்கும், வீவாணி இயக்கத்துக்கும், தரைவழி தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா எர்ட்சு (2500-2690 கிகா எர்ட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் பன்ன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் 2000ம் ஆண்டு தரைவழி அலைப்பேசி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[1]

இந்திய எசு அலைப்பட்டை விவாதம்

2011 பிப்ரவரியில் இந்திய விண்வெளித்துறையின் வணிகக் கிளையான ஆந்திரிக்சு கழகம் இதன் ஒரு பகுதி 70 மெகா எர்ட்சு அளவிற்கு தேவாசு மல்டிமீடியா, பெங்களூரு என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 2,00,000ம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.[2][3] தற்போது இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு நீக்க முடிவு செய்துள்ளது.

மேற்கோள்கள்

  1. http://www.thehindu.com/opinion/editorial/article1200374.ece
  2. "இஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!". Archived from the original on 2011-02-09. Retrieved 2011-02-10.
  3. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=374046&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya