அல்போன்சா மாம்பழம்
![]() அல்போன்சா மாம்பழம் (Alphonso (Mango) என்பது இந்தியாவில் தோன்றிய மாம்பழ வகையாகும். [1] இதற்கு காதர் குண்டு, பாதாமி, அப்பூஸ் போன்ற பிற பெயர்கள் உண்டு. நல்ல தரமான இரகமாக இப்பழம் கருதப்படுகிறது.[2] வெளிநாடுகளுக்கு இந்தப் பழங்கள் பழமாகவும், பழக்கூழாகவும் ஏற்றுமதியாகின்றன. நல்ல சுகந்த நறுமணத்துடன் இந்தப் பழம் சிறியதாக, தரமானதாக, மிகவும் இனிப்பாக, மிருதுவாக, நார் அற்றதாக, சதைப்பற்றுடன் சாறு நிறைந்ததாகவும் இருக்கும். நல்ல இருப்புத் தன்மை உடையதால் இது நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ள பழம் ஆகும்.[3] தோற்றம்இதற்கு, இந்தியாவில் போர்த்துகீசிய காலனிகளை நிறுவ உதவிய போர்த்துகீசிய பொது மற்றும் இராணுவ நிபுணரான அபோன்சோ டி அல்புகெர்க்கின் பெயரிடப்பட்டது. [1] அல்போன்சா போன்ற வகைகளை உற்பத்தி செய்ய போர்த்துகீசியர்கள் மா மரங்களில் ஒட்டுச்செடிகளை அறிமுகப்படுத்தினர். அல்போன்சா மாம்பழம் மிகவும் விலையுயர்ந்த வகைகளில் ஒன்றாகும். இது முக்கியமாக மேற்கு இந்தியாவில் வளர்க்கப்படுகிறது. [4] [5] [6] ![]() விளக்கம்அல்போன்சா ஒரு பருவகால பழமாகும். இது ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து சூன் இறுதி வரை கிடைக்கும். [1] பழங்கள் பொதுவாக 150 முதல் 300 கிராம் வரை (5.3 முதல் 10.6 அவுன்ஸ்) எடையுள்ளதாக இருக்கும். முழுமையாக பழுத்த அல்போன்சா மாம்பழத்தின் தோல் பிரகாசமான தங்க-மஞ்சள் நிறத்துடன் சிவப்பு நிறம் கலந்து காணப்படும் இது பழத்தின் மேல் பகுதி முழுவதும் பரவியிருக்கும். பழத்தின் சதை குங்குமப்பூ நிறமுடையது. இந்த குணாதிசயங்கள் அல்போன்சாவை விருப்பமான சாகுபடியாக ஆக்குகின்றன. [7] சமையல்சர்பத், ஐஸ்கிரீம், லஸ்ஸி, மற்றும் கூழ் ஆகியவை அல்போன்சா மாம்பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் சில சமையல் தயாரிப்புகளாகும். வர்த்தகம்அல்போன்சா அதன் சுவை, மணம் மற்றும் துடிப்பான நிறத்திற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மதிப்புமிக்கதாய் இருக்கிறது.. [1] இது யப்பான், கொரியா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்குத் தடைஅல்போன்சா உள்ளிட்ட இந்திய மாம்பழங்களுக்கு 1989 ஆம் ஆண்டில் அமெரிக்கா விதித்த இறக்குமதி தடை ஏப்ரல் 2007 இல் மட்டுமே நீக்கப்பட்டது. [8] இருப்பினும், அமெரிக்க விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூர்வீகமற்ற பழ ஈக்கள், அழிக்கும் பூஞ்சைகள் மற்றும் பிற பூச்சிகளை தடுக்க மாம்பழங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தரம் பார்க்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் சில பொருட்களில் "ஐரோப்பிய அல்லாத பழ ஈக்களை" கண்டுபிடித்த பின்னர் மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஏப்ரல் 2014 முதல் தடை விதித்தது. இது இங்கிலாந்து பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை உருவாக்கியது. [9] இந்திய அரசாங்கம் இந்த முடிவை தன்னிச்சையானது என்றும் வணிகங்கள் தடையால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறியது. இந்திய மாம்பழ ஏற்றுமதி முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைத் தொடர்ந்து 2015 சனவரியில் ஐரோப்பிய ஆணையம் தடையை நீக்கியது. [10] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia