அல்மகிரா கடல்
அல்மகிரா கடல் (ஆங்கிலம்: Halmahera Sea; இந்தோனேசியம்: Laut Halmahera) என்பது ஆஸ்திரேலிய மத்திய நிலக்கடல் பகுதிக்கு Australasian Mediterranean Sea கிழக்கே அமைந்துள்ள ஒரு சிறு கடல்; மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் ஒரு நீர்ப்பகுதியாகும். இந்தக் கடல் 1° தெற்கு ரேகை; மற்றும் 129° கிழக்கு புவிக்கோட்டில் மையம் கொண்டுள்ளது. வடக்கே பசிபிக் பெருங்கடல், மேற்கே அல்மகிரா, கிழக்கே வைகியோ மற்றும் மேற்கு பப்புவா மற்றும் தெற்கே செராம் கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன. பொதுஅல்மகிரா கடல் ஏறக்குறைய 95,000 சகிமீ (59,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் நிலப்பரப்பு பல தனித்தனி படுகைகள் மற்றும் முகடுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது அல்மகிரா படுகை; இதன் ஆழம் 2039 மீ. ஆகும். பன்னாட்டு நீரியல் வரைபட அமைப்பு (International Hydrographic Organization) (IHO) அல்மகிரா கடலை, கிழக்கு இந்திய தீவுக்கூட்டத்தின் (East Indian Archipelago) நீர்நிலைகளில் ஒன்றாக வரையறுக்கிறது.[1] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia