அல்மலிக், சிஞ்சியாங்அல்மலிக்[1] என்பது சீனாவின் சிஞ்சியாங்கில் குவோச்சங் மாவட்டத்தில் இலி வடிநிலத்தில் உள்ள ஒரு நடுக்கால நகரமாகும். இது கசக்கஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. அல்மலிக் என்பது துருக்கிய ககானரசுகளின் கர்லுக் நகரங்களில் ஒன்றாக இருந்தது. மங்கோலியச் சகாப்தத்தின் பாரசீக வரலாற்றாளர்கள் மற்றும் சீனப் பயணிகளின் பதிவுகளில் இருந்து இந்த நகரத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். குறிப்பாகத் தாவோயியத் துறவியான சியு சுஜியின் குறிப்புகளிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். செங்கிஸ் கானின் முதன்மை ஆலோசகரான எலு சுகையின் பயணக் குறிப்புகளின்படி அல்மலிக் நகரமானது தியான் சான் மலைகள் மற்றும் இலி ஆற்றுக்கு இடையே அமைந்திருந்தது. அல்மலிக்கைச் சுற்றி ஒரு வகை ஆப்பிள் மரங்கள் ஏராளமாக இருந்தன. அங்கு வாழ்ந்த மக்கள் இந்த மரங்களை "அல்மலிக்" என்றழைத்தனர். இவ்வாறாக இந்நகரம் இப்பெயரைப் பெற்றது.[2] உசாத்துணைகுறிப்புகள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia