அல்-உயூன்
அல்-உயூன் அல்லது லஅயூன் (Laayoune, எசுப்பானியம்: El-Aaiún; அரபு மொழி: العيون al-ʿuyūn, தமிழாக்கம்: "ஊற்று") பிணக்கிலுள்ள ஆட்புலமான மேற்கு சகாராவிலுள்ள பெரிய நகரமாகும். தற்கால நகரத்தை 1938இல் எசுப்பானிய குடியேற்றவாதி அன்டோனியோ டெ ஓரோ நிறுவியதாகக் கருதப்படுகின்றது.[1] 1940இல் இதனை எசுப்பானிய சகாராவின் தலைநகராக அறிவித்தது. தற்போதைய மொராக்கோ அரசின் லாயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா வலயத்தின் தலைநகராக விளங்குகின்றது. வறண்ட ஆறான சகுய்யா அல் அம்ரா இந்நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. ஆற்றின் தென்கரையில் உள்ளது எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய நகராகும். இங்கு அவர்கள் காலத்து பேராலயமொன்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. இதன் பாதிரிமார்கள் இந்த நகரத்திற்கும் மேலும் தெற்கிலுள்ள தாக்ளாவிற்கும் சேவை புரிகின்றனர். 1976 முதல் மேற்கு சகாராவை தனது நாட்டங்கமாக கோரிய மொரோக்கோ இந்த நகரை கைப்பற்றி ஆண்டு வருகின்றது.[2] அல்சீரியா ஆதரவளிக்கும் போலிசரியோ முன்னணி மேற்கு சகாராவின் விடுதலைக்குப் போராடி வருகின்றது. இந்த அணி லாயூனை ஆக்கிரமிக்கப்பட்ட தலைநகராகக் கருதுகின்றது. மக்கள் பரம்பல்![]() லாயூன் நகரத்தின் மக்கள்தொகை 196,331 ஆகும்.[3] இதுவே மேற்கு சகாராவிலுள்ள மிகப்பெரிய நகரமாகும். பொருளாதார மையமாக வளர்ந்துவரும் லாயூனின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவரே மேற்கு சகாராவின் பழங்குடிகளான சகாராவினராக உள்ளனர்; ஏனையவர்களில் பெரும்பகுதியினர் வடக்கிலிருந்து அரசு தரும் சலுகைகளுக்காகவும் அரசுப் பணி நிமித்தமாகவும் குடிபெயர்ந்துள்ள மொராக்கோவினராகும்.[4] பொருளாதார நிலை![]() இந்நகரை மொரோக்கோ கைப்பற்றியது முதல் இது மீன்பிடித் தொழிலுக்கும் பாசுபேட்டு சுரங்கங்களுக்கும் மையமாக விளங்குகின்றது.[4] 2010இல் ஐரோப்பாவுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான புதிய உடன்பாட்டை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற மொராக்கோ நகரக் கட்டமைப்பிலும் வட்டார வளர்ச்சியிலும் பெரிதும் முதலீடு செய்துள்ளது.[4] அரசியல் நிலைப்பாடாக மொராக்கோ பல்லாண்டுகளாகவே மேற்கு சகாரா தனது ஆட்பகுதியில் இருந்து வந்ததாக உரிமை கோரி வருகின்றது. மூரித்தானியாவும் மேற்கு சகாராவிற்கு உரிமை கொண்டாடியபோதும் நீண்ட காலமாகவே மொராக்கோ இப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அல்சீரியாவின் ஆதரவைப் பெற்றுள்ள போலிசரியோ முன்னணி மொராக்கோ இராணுவத்துடன் போரிட்டு வருகின்றது; இப்பகுதிக்கு சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு என இறையாண்மை வேண்டுகின்றது. 16 ஆண்டுகள் சண்டைக்குப் பின்னர் 1991இல் போலிசரியோ முன்னணிக்கும் மொராக்கோவிற்கும் இடையே ஐ.நா. போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் 1999க்கும் 2005க்கும் இடையே அவ்வப்போது கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன.[4] இந்த போர்நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா. குழுவின் தலைமையகம் இந்த நகரில் உள்ளது. 2010இல் இப்பகுதிக்கு முடிந்தளவில் தன்னாட்சி வழங்க ஐ.நா. மொராக்கோ, போலிசரியோ குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்; இதில் அல்சீரியாவும் மூரித்தானியாவும் அலுவல்முறை நோக்கர்களாகப் பங்கேற்க உடன்பட்டுள்ளனர்.[4] வானிலைலாயூன் (அல்-ஐயூன்) வளைகுடா ஓடையால் மிதமாக்கப்பட்ட பாலைவன வானிலையைக் கொண்டுள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை 20°C ஆகவுள்ளது.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்அல்-உயூன் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
|
Portal di Ensiklopedia Dunia