அழுத்தமானி
![]() ![]() அழுத்தமானி என்பது வளிமம் (அ) வாயுக்கள் மற்றும் நீர்மம் (அ) திரவங்களின் அழுத்தத்தினை அளவீட பயன்படுகின்றது. அழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதன் ஒரு குறிப்பிட்ட அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையாகும். அழுத்தமானி பொதுவாக பண்புப்பெயர்ப்பியாக செயற்படுகின்றது. எடுத்துக்காட்டாக அழுத்தத்தினை மின்னியல் சக்தியாக மாற்றுவதைக் கூறலாம். அழுத்தமானி என்பது நம்முடைய தினச்செயற்பாடுகளில் கட்டுப்படுத்தும் கருவியாகவும், மேற்பார்வையிடும் கருவியாகவும் பயன்படுகின்றது. அழுத்தமானி மறைமுகமாக திரவ/வாயுக்களின் ஒட்டத்தினையும், வேகம மற்றும் திரவங்களின் மட்டத்தினையும், உயரத்தினையும் அளவீடப் பயன்படுகின்றது. அழுத்தமானியானது அழுத்தபண்புப்பெயர்ப்பி (pressure transducer), அழுத்தம் ட்ரான்ஸ்மீட்டர், அழுத்தம்சுட்டி (pressure indicator), நீலத்தடிநீர் மட்டமானி (piezometer), குறைவழுத்தமானி (manometer) என்றும் அழைக்கப்படுகின்றது. அழுத்தமானியானது தொழில்நுட்பம், செயற்பாடு, வடிவமைப்பு, பயன்பாடு மற்றும் விலையின் அடிப்படையில் வெவ்வேறு வகையில் வித்தியாசப்படுகின்றது. இன்றையளவில் தோரயமாக 50க்கும் மேற்பட்ட அழுத்தமானி 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றது. வகைகள்அழுத்தமானியானது அது அளவீடும் அழுத்தத்தினையையும், வெப்பநிலை பயன்பாடுகளையும் பொருத்து வகைப்படுத்தப்படுகிறது, எனினும் அழுத்தத்தினை பொறுத்தே அதன் வகைபாடுகள் கீழ்கண்டனவாக வகைப்படுத்தப்படுகிறது.
இது முற்றிலும் வெற்றிடத்தினை அளவீடும் கருவியாகும்.
இதுவும் வெற்றிடத்தினை அளவீடும் என்றாலும், இது வளிமண்டலத்திற்கு கீழேயுள்ள அழுத்ததினை அளவீடும் கருவியாகும்.
இது வளிமண்டல அழுத்தத்தினை அளவீடும் கருவியாகும்.
இது இரு வேறுபட்ட அழுத்தத்தினை அளவீடும் கருவியாகும், அழுத்தமானியோடு இருவேறு அழுத்தத்தினை அளவீட வேண்டிய பகுதியானது இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு அழுத்ததிற்கும் இடையுள்ள வித்தியாசத்தினை அளவீடும்.
இதுவும் வளிமண்டல அழுத்தமானியை போன்றே செயற்படும். ஆனால் இது வளிமண்டல அழுத்தத்தினை ஓப்பீடுவதற்கு பதிலாக இதனோடு இணைக்கப்பட்டுள்ள மூடப்பட்டஅழுத்தத்தினை ஓப்பீடும். பயன்பாடுகள்அழுத்தமானி அழுத்தத்தினையும், உயரத்தினையும், ஓட்டத்தினையும், மட்டத்தினையும்/ஆழத்தினையும், ஒழுக்கினையையும், அளவீடப் பயன்படுகின்றது. இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia