அவரையினம்![]() ![]() அவரையினம் (bean) என்பது பூக்கும் தாவரத்தின் பல பேரினங்களில் ஒன்றின் கொட்டைதரும் பயிராகும். இது பட்டாணி, அவரைக் குடும்பத்தினைச் சேர்ந்த பேரினமாகும். இது மாந்த உணவாகவும் விலங்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. சொல்லியல்"அவரையினம்" எனும் சொல் செருமானிய மொழியில் போக்னே என மேற்கு செருமனியில் 12 ஆம் நூற்றாண்டு முதலே அகல் அவரைக்கும் பிற பொட்டுடைய கொட்டைகளுக்கும் வழங்கி வருகிறது.[1] ![]() அவரைக் கொட்டைகள் பருப்புவகைப் பயிர்களிலும் அடங்குவதுண்டு..[1] குறுகிய பொருளில் அவரை பருப்பு எனப்பட்டாலும் பருப்பு எனும் சொல் உலர்மணிகள் அமைந்தபடி அறுவடை செய்யப்ப்படும் உலர்கொட்டைகளையே குறிக்க ஒதுக்கப்பட்ட பெயராகும். "அவரையினம் " எனும் சொல் தீவனமாகப் பயன்படும் கிராம்பு, அல்பால்பா போன்ற சிறுகொட்டை பருப்பு வகைகளை உள்ளடக்குவதில்லை. ஐக்கிய அமெரிக்கா உணவு, வேளாண்மை நிறுவன வரையறையின்படி, "உலர் அவரை" (உறுப்படிக் குறிமுறை 176) என்பது Phaseolus என்ற இனத்தை மட்டும் உள்ளடக்க வேண்டும்; என்றாலும், பல காரணங்களால் இந்த வரையறையைக் கடைபிடிப்பது அரிதாகும். ஒரு காரணம், கடந்த காலத்தில் பல தாவர இனங்கள், Vigna angularis (adzuki அவரை), V. mungo (காராமணி), V. radiata (பயறு), V. aconitifolia (moth அவரை) ஆகியவை Phaseolus வகையில் உள்ளடக்கப்பட்டு, பிறகு மீள்வகைபாட்டுக்கு மாறின. மற்றொரு காரணம் பொதுவழக்கு இத்தகைய கடைபிடிப்புகளைப் பின்பற்றுவதில்லை ;[2][3] மேலும், இந்தக் கடைபிடிப்பு குறிப்பிட்ட சூழல்களிலேயே முடியும். பயிரிடல்![]() மிகவும் நெருக்கமான பட்டாணியைப் போன்றல்லாமல், அவரையினம் கோடைப் பயிராகும். இதற்கு வெதுவெதுப்பான காலநிலை தேவைப்படுகிறது. அவரைக் கொடி நட்டதில் இருந்து 55-60 நாட்களில் முதிர்வுறுகிறது.[4] அவரைக் காயின் தோல் முதிர்ந்ததும் மஞ்சள் நிறமடைந்து உலர்கிறது. உள்ளே உள்ள மணி பச்சை நிறத்தில் இருந்து முதிர்கொட்டை நிறத்தை அடைகிறது.[தெளிவுபடுத்துக] இது கொடியாக உள்லதால் கூடுகளிலோ கம்பக் குதிரைகளிலோ தாங்கஅடவேண்டும். தாயக அமெரிக்க மக்கள் அவரையை கூலப் பயிருடன் ஊடுபயிராக நட்டு வளர்க்கின்றனர்,[5] கூலப் பயிரின் தட்டு அவரையைத் தாங்கும் கொழுக்கொம்பாகிறது. அண்மையில் உருவாக்கப்பட்ட புதர் அவரைக்கு கொழுக்கொம்பேதும் தேவையில்லை. கம்பத்தால் தாங்கப்படும் அவரைக்கொடியைப் போல் படிப்படியாக முதிராமல், புதர் அவரையில் ஒருங்கே அனைத்துக் காய்களும் முதிர்கின்றன.[6] எனவே இது வணிகப் பயிரிடலுக்கு மிகவும் உகந்ததாக அமைகிறது. ![]() வரலாறு![]() அவரைகள் மிக நெடுங்காலமாக வளர்க்கப்படும் பயிராகும். அகல் அவரை காட்டு மூதாதை பவா அவரை எனப்பட்டது இது சிறுவிரல் அளவு கண்டது. இது ஆப்கானித்தனிலும் இமயமலைச் சாரலிலும் முதலில் திரட்டி வீட்டினமாக்கப்பட்டுள்ளது.[7] பிறகு, மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் தாய்லாந்தில் கிமு 7000 இல் சுடுமட் பொறுள்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பயிரிடப்பட்டுள்ளது.[8] இவை எகுபதியில் இறந்தோர் தாழியில் வைக்கப்பட்டுள்ளன. கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்ரையினம் பேரளவில் ஐரோப்பியப் பகுதிகளில் பயிரிடப்படவில்லை.[9] கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இலியாது காப்பியத்தில் கதிரடித்த தளத்தில் வாணலியில் இருந்த அவரையும் சுண்டலும் பற்றிய குறிப்புகள் உள்ளன.[10] அவரை முதன்மையான புரத உணவாக, பழைய உலகிலும் புத்துலகிலும் வரலாற்றுக் காலம் முதல் இன்று வரையில் இருந்து வருகின்றன. [11] அவரையின வகைகள்நடப்பு மரபியல் வங்கிகளின்படி, 40,000 அவரையினங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிலவே பேரளவில் நுகர்வுக்காகப் பயிரிடப்படுகின்றன.[12] மேற்கோள்கள்
நூல்தொகை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia