அவளும் நானும் (தொலைக்காட்சித் தொடர்)
அவளும் நானும் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 பெப்ரவரி 2018 முதல் 22 ஜூன் 2019 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடர் அசாமிய மொழி தொடரான 'அர்தங்கினி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்தத் தொடரை இயக்குநர் தனுஷ் இயக்க, நடிகை மௌனிகா இந்தத் தொடரில் இரட்டைச் சகோதரிகளாக நிலா மற்றும் தியாவாக நடித்துள்ளார்,[1] இதுவே இவரின் முதல் தொலைக்காட்சித் தொடரும் ஆகும். இந்த தொடரில் நாயகனாக அம்ருத் மற்றும் ஸ்ரீ மஹாதேவ் நடித்துள்ளார்கள், இவர்களுடன் தரிஷ், கண்ணன், ஸ்ரீ லதா, ஷியாம் கோபால் ஆகியோரும் நடித்து உள்ளார்கள்.[2][3][4][5][6] இந்தத் தொடர் 22 சூன் 2019 அன்று 280 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதைச்சுருக்கம்இரட்டைச் சகோதரிகளான நிலா மற்றும் தியா பணக்கார வீட்டுப் பையனான பிரவீனுடன் நிலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், நிலாவோ விஜய் என்ற பையனைக் காதலிக்கிறார். ஆனால், பெற்றோரிடம் சம்மதம் கிடைக்கவில்லை. எனவே, திருமணத்துக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போகிறார் நிலா. குடும்பப் பெயரைக் காப்பாற்றுவதற்காக, தியாவை நிலா என்று சொல்லி பிரவீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பெற்றோரை விட்டுப் பிரிந்து காதலனுடன் சென்ற நிலாவின் கணவன் ஒரு விபத்தில் இறக்கின்றான். இதன் பிறகு நிலா பெயரில் செல்லும் தியாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது? என்பதுதான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
தியா / நிலா குடும்பத்தினர்
பிரவீன் குடும்பத்தினர்
துணை கதாபாத்திரம்
நேரம் மாற்றம்இந்தத் தொடர் முதல் முதலில் விஜய் மேட்னி தொடர்கள் என்ற பெயரின் கீழ் 26 பெப்ரவரி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. புதிய இதிகாசத் தொடரான ராதா கிருஷ்ணா என்ற தொடருக்காக, டிசம்பர் 3 ஆம் திகதி முதல் மதியம் 12:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. பின்னர் ஜனவரி 7, 2019 முதல் பழைய நேரமான 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia