அஸ்கரியேசிஸ்
அஸ்கரியேசிஸ் (ascariasis) என்பது வட்டப்புழு (Ascarislumbricoides) என்ற புழுவின் மூலம் ஏற்படுகின்ற ஒரு நோயாகும்.[1] 85% இற்கும் அதிகமானவர்களின் விடயத்தில் குறிப்பாக புழுக்களின் எண்ணிக்கை சிறியளவில் காணப்படுகின்ற போது இத்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படமாட்டாது.[1] புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது குறுஞ் சுவாசம் உள்ளிட்ட அறிகுறிகளும் அதிகரிக்கும். இந்நோய் காய்ச்சலில் ஆரம்பிக்கும்.[1] இவற்றைத் தொடர்ந்து வயிறு வீங்குதல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு என்பன ஏற்படக்கூடும்.[1] பொதுவாக இந்நோயினால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் இவ்வயதுப் பிரிவினர் மத்தியில் பாரம் அதிகரிப்பது குறைவடைவதற்கும், போசாக்கின்மை ஏற்படுவதற்கும் கற்றல் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கும் இத்தொற்று காரணமாக அமைகின்றது.[1][2][3] காரணம் மற்றும் செயன்முறைஅஸ்கரிஸ் முட்டைகளால் மாசுற்ற உணவுகளை அல்லது பானங்களை உட்கொள்வதன் மூலம் இத்தொற்று ஏற்படுகின்றது.[2] இந்த முட்டைகள் குடல்களில் பொரித்து, குடற் சுவரின் ஊடாகவும் இரத்தத்தின் ஊடாகவும் நுரையீரல்களுக்குச் செல்கின்றன.[2] அங்கு அவை அல்வியோலிக்குகளாக வெடித்து சுவாசக் குழாயைக் கடந்து இருமும் போது வெளியே வந்து விழுங்கப்படுகின்றன.[2] இந்த நுண்புழுக்கள் இரண்டாவது தடவையாக வயிற்றின் ஊடாகக் குடற் பகுதிக்குச் சென்று அங்கே பெரிய புழுக்களாக வளர்ச்சியடைகின்றன.[2] நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைமலசலகூட வசதி, மலங்களை உரிய முறையில் அகற்றுவதற்கான வசதி உள்ளிட்ட துப்புரவு வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக நோய்த் தடுப்பினை ஏற்படுத்த முடியும்.[1][4] சவர்க்காரமிட்டு கை கழுவுதல் பாதுகாப்பான ஒரு வழிமுறையாகும்.[5] மக்கள்தொகையில் 20% இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில், தொடர்ச்சியான கால இடைவெளிகளில் அனைவருக்கும் சிகிச்சையளிப்பது சிறந்தது எனச் சிபாரிசு செய்யப்படுகின்றது.[1] மீள ஏற்படும் தொற்றுக்கள் பொதுவானவையாகும்.[2][6] இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.[2] உலக சுகாதார நிறுவனத்தினால் இதற்கான சிகிச்சைக்காக albendazole, mebendazole, levamisole அல்லது pyrantel pamoate ஆகிய மருந்துகள் சிபாரிசு செய்யப்படுகின்றன.[2] ஏனைய பயனளிக்கக் கூடிய மருந்துகளில் tribendimidine, nitazoxanide என்பனவும் உள்ளடங்குகின்றன.[2] தொற்று நோயியல்உலகளாவிய ரீதியில் சுமார் 0.8 முதல் 1.2 பில்லியன் வரையான மக்கள் அஸ்கரியேசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டள்ளனர். மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக ஆப்பிரிக்காவின் சகாரா துணைப் பிரதேசம், இலத்தின் அமெரிக்கா, ஆசியா ஆகிய பிரதேசங்கள் விளங்குகின்றன.[1][7][8] இதன் அடிப்படையில் நோக்குகையில் மண்ணின் மூலம் பரவுகின்ற குடற்புழுக்களில் மிகவும் பொதுவான வகையாக அஸ்கரியேசிஸ் விளங்குகின்றது எனலாம்.[7] 1990 ஆம் ஆண்டில் 3,400 ஆக்க் காணப்பட்ட இந்நோயின் மூலமான மரணம் 2010 ஆம் ஆண்டில் 2,700 ஆகக் காணப்பட்டது.[9] பிறிதொரு வகை அஸ்கரியேசிஸ் பன்றிகளைத் தொற்றுகின்றது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia