அஸ்திரம் (2025 திரைப்படம்)
அஸ்திரம் (Asthram) 2025-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குற்றவியல் தொடர்பான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் இராஜகோபால் இயக்கினார்.[1] இப்படத்தின் கதையை ஜெகன் எம்.எஸ் உடன் இணைந்து அரவிந்த் இராஜகோபாலும் எழுதினார். இத்திரைப்படம் 2025 மார்ச் 21 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்பு2024 பெப்ரவரி மாதத்தில், முதற் தோற்றச் சுவரொட்டியில், நடிகர் சாமின் அடுத்த திரைப்படம் அஸ்திரம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.[2] அறிமுக இயக்குநர் அரவிந்த் இராஜகோபால் இயக்கியுள்ள இப்படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பாக டி. எஸ். எம் தன சண்முகமணி தயாரித்துள்ளார்.[3] இப்படத்தில் நிழல்கள் ரவி, அருள் டி. சங்கர், ஜீவா ரவி, ரஞ்சித் டி. எஸ். எம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[4] தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக கல்யாண் வெங்கடராமன், படத்தொகுப்பாளராக பூபதி, இசையமைப்பாளராக கே. எஸ். சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்காற்றியுள்ளனர்.[5] முதன்மைப் புகைப்படம் எடுக்கும் பணி 30 நாள்களாக சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்தது. திரைப்படப் பணிகள் ஏற்கனவே அறிவித்த அறிவிப்பிற்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.[6][7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia