அ. அய்யாசாமி
பேராசிரியர் அ.அய்யாசாமி (பிறப்பு: மார்ச் 1 1940, மறைவு: ஜூன் 16, 2019) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். பள்ளி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். முல்லைச்சரம், தாமரை, கல்கி, கணையாழி போன்ற இதழ்களில் கதை, கட்டுரை, கவிதைகள் என பல எழுதியுள்ளார். கதிரொளி, Leslie Amarson, A S Mee என்ற புனைபெயர்களில் கட்டுரைகளும், சுபத்ரா அய்யாசாமி என்ற பெயரில் சிறுகதைகளும், வித்தகன் என்ற புனைபெயரில் தாமரை இதழில் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதினார். அகில இந்திய வானொலியிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார், அறிவியல் நெடுந்தொடரை எழுதியிருக்கிறார். ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் புலமைபெற்றவர், பல மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். இவர் எழுதிய வைக்கம்[1] எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நாடகம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2010-இல் தமிழக அரசின் திரு. வி. க. விருதையும், 2016-இல் தி. மு. க. முரசொலி அறக்கட்டளையின் பெரியார் விருதையும், தமிழ்க் கவிஞர் மன்றத்தின் இலக்கியப் பேரொளி விருதையும் பெற்றவர். எழுதிய நூல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia