அ. கன்னியாகுமாரி![]() அவசரளா கன்னியாகுமாரி தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அன்னமைய்யா என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்துள்ளார். திருமலையில் உள்ள ஏழுமலைகளும் சப்தகிரி என்று அழைக்கப்படுவதால் அதன் மீது பற்று கொண்ட கன்யாகுமாரி தான் கண்டுபிடித்த புதிய ஏழு ஜன்ய ராகங்களுக்கு அம்மலைகளின் பெயரையே வைத்துவிட்டதாக அறியப்படுகிறது.[1] ஆரம்பகால வாழ்க்கைஇவரின் சொந்த ஊர், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகரம் எனும் நகரமாகும். பெற்றோர்: அவசரள இராமரத்னம், ஜெயலட்சுமி. புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாகிய இவதுரி விஜேச்வர ராவ், எம். சந்திரசேகரன், எம். எல். வசந்தகுமாரி ஆகியோரிடம் கன்னியாகுமாரி இசையினைக் கற்றார். தொழில் வாழ்க்கைகன்னியாகுமாரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வருகிறார். தான் தனியாக வாசிக்கும்போதும், மற்ற வயலின் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வாசிக்கும்போதும் புதுமைகள் பலவற்றை புகுத்தி இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார். வாத்திய லஹரி எனும் பெயரில் வயலின், வீணை, நாதசுவரம் எனும் 3 இசைக் கருவிகள் பங்குகொள்ளும் இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். பெற்ற சிறப்புகள்
பயிற்றுவித்தல்கன்யாகுமாரி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். பயிற்றுவிப்பு காணொளிக் குறுந்தகடுகளையும் இவர் வெளியிட்டுள்ளார். பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia