ஆகுஸ்டஸ் மலை![]() ஆகுஸ்டஸ் மலை தேசிய பூங்கா (Mount Augustus National Park) மேற்கு ஆஸ்திரேலியா தலைநகர் பேர்த் நகரில் இருந்து 852 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. இப்பூங்காவில் அமைந்துள்ள ஆகுஸ்டஸ் மலை உள்ளூர் தொல்குடி மக்களான வஜாரிகளினால் பரிங்குரா என அழைக்கப்படுகிறது[1]. ஆகுஸ்டஸ் மலைஆகுஸ்டஸ் மலை கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்திலும், அல்லது அதனைச் சூழவுள்ள தரைப்பகுதியில் இருந்து 860 மீ உயரத்திலும் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 47.95 கி.மீ.². இம்மலை உலகின் மிகப்பெரிய ஒரே பாறையினாலான கற்பாறை எனக் கருதப்படுகிறது[2]. ஆனாலும், ஆஸ்திரேலியாவின் உலூரு என்ற மலையும் இதற்கென உரிமை கோரி வருகிறது. ஐரோப்பிய வரலாறு1858 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் இதன் உச்சியை பிரான்சிஸ் தொமஸ் கிரெகரி என்பவர் அடைந்தார். இவரே இம்மலையில் ஏறிய முதலாவது ஐரோப்பியர் ஆவார். இவரது சகோதரர் சேர் ஆகுஸ்டஸ் சார்ல்ஸ் கிரெகரி (1819-1905) என்பவரின் நினைவாக இம்மலைக்கு ஆகுஸ்டஸ் மலை என இவர் பெயரிட்டார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia