ஆக்குநர்சுட்டு

படைப்பாக்கப் பொதும உரிமங்களில் ஆக்குநர்சுட்டைக் காட்டும் குறியீடு

பதிப்புரிமைச் சட்டத்தில், ஆக்குநர்சுட்டு (Attribution) என்பது ஒரு படைப்பின் பதிப்புரிமத்தைக் கொண்டுள்ளவரை முறையாகக் குறிப்பிடுவதைச் சுட்டும். மிக அடிப்படையான ஆக்குநர்சுட்டு முறை என்பது, பெரும்பாலும் பதிப்புரிமை © [ஆண்டு] [பதிப்புரிமை உடையவரின் பெயர்] என்று குறிப்பிடுவதாக அமையும். ஓர் ஆக்கம் பொது உரிமைப் பரப்புக்கு வரும் வரை இத்தகைய ஆக்குநர்சுட்டை இடுவது தேவையாகும். குனூ தளையறு ஆவண உரிமம், படைப்பாக்கப் பொதுமங்கள் போன்ற உரிமங்கள் மேற்கண்ட பொதுவான அறிவிப்புக்கும் கூடுதலான ஆக்குநர்சுட்டு வழிமுறைகளைக் கொண்டிருக்கலாம்.[1]

ஆக்குநர்சுட்டு என்பது உரிமங்கள் வலியுறுத்தும் மிகவும் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாகும். இது, படைப்புகளின் மீது பிறர் போலியாக உரிமை கோருவதைத் தவிர்ப்பதுடன் பதிப்புரிமை உடையவருக்கு உரிய நன்மதிப்பைப் பெற்றுத் தந்து அவரது இழப்புகளை ஓரளவேனும் ஈடு செய்யவும் உதவுகிறது. 

மேற்கோள்கள்

  1. Creative Commons, FAQ
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya