ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி லிமிடெட் என்பது மும்பை, மகாராட்டிரத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவரும் தனியார் துறை வங்கியாகும்.[6] இவ்வங்கி பெரிய, நடுத்தர, சிறு குறு மற்றும் தனி நபர்களுக்கு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. 30 ஜூன் 2016 நிலவரப்படி, 30.81% பங்குகள் இதன் நிறுவனர்கள் குழுவிற்கு சொந்தமானவை ( யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஜிஐசி, எல்ஐசி மற்றும் யுடிஐ ).[7] மீதமுள்ள 69.19% பங்குகள் பரஸ்பர நிதியம், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்(எஃப்ஐஐக்கள்), பிற வங்கிகள், பிற காப்பீட்டு நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வைத்துள்ளனர்.[8] வரலாறுடிசம்பர் 1993ல் அகமதாபாத்தில் பதிவு அலுவலகத்தையும் மும்பையை தலைமையிடமாகவும் கொண்டு, யுடிஐ வங்கி என ஆரம்பிக்கப்பட்டது.[9] இவ்வங்கி யுடிஐ (யுனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா), எல்ஐசி, ஜிஐசி, என்ஐசி, தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி, தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கிளை 1994 ஏப்ரல் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் அப்போதைய இந்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அவர்களால் திறக்கப்பட்டது. [10] 2001ல் யுடிஐ வங்கி குளோபல் டிரஸ்ட் வங்கியுடன் இணைய ஒப்புக்கொண்டது, இருப்பினும் ரிசர்வ் வங்கி அனுமதிக்காததால் இணைவு நடைபெறவில்லை. 2004 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி குளோபல் டிரஸ் வங்கியை தடைக்கு உட்படுத்தியது மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸுடன் இணைவதை மேற்பார்வையிட்டது. அடுத்த ஆண்டு, யுடிஐ வங்கி லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது .[11] 2006 ஆம் ஆண்டில், யுடிஐ வங்கி தனது முதல் வெளிநாட்டு கிளையை சிங்கப்பூரில் திறந்தது. அதே ஆண்டு அது சீனாவின் ஷாங்காயில் ஒரு அலுவலகத்தைத் திறந்தது. 2007 ஆம் ஆண்டில், இது துபாய் சர்வதேச நிதி மையத்தில்( ஒரு கிளையையும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் திறந்தது.[12] ஜூலை 30, 2007ல், தன் பெயரை ஆக்சிஸ் வங்கி என மாற்றிக் கொண்டது.[13] 2009 ஆம் ஆண்டில், ஷிகா சர்மா ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.[14] 2013ல் ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனமான ஆக்சிஸ் வங்கி யுகே, தனது சேவையை தொடங்கியது.[15] 1 ஜனவரி 2019ல் அமிதாப் சௌத்ரி மேலாண்மை இயக்குநராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.[16] 2021 ஆம் ஆண்டில், வங்கி ஆம் வங்கியில் தனது பங்குகளை 2.39 சதவீதத்திலிருந்து 1.96 சதவீதமாகக் குறைத்தது.[17] செயல்பாடுகள்இந்திய வர்த்தகம்12 ஆகஸ்ட் 2016 வரை 4,094 வங்கி கிளைகள் மற்றும் நீட்டிப்பு மையங்களையும், 12,922 ஏடிஎம்களையும் கொண்டிருந்தது.[18] இந்தியாவின் தனியார் வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி மிகப்பெரிய ஏடிஎம் வலையமைப்பைக் கொண்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த இடத்தில் செயல்படும் ஏடிஎம்யை, தேஃகு, சிக்கிமில் கொண்டுள்ளது இவ்வங்கி. இது கடல் மட்டத்தில் இருந்து 4,023 மீட்டர் உயரத்தில் உள்ளது.[19] உலகளாவிய வர்த்தகம்இவ்வங்கி, சிங்கப்பூர், ஹாங் காங், துபாய், சாங்காய், கொழும்பு ஆகிய இடங்களில் கிளைகளையும் டாக்கா, சார்ஜா, மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் கார்ப்பரேட் கடன், வியாபார கடன், முதலீட்டு வங்கி மற்றும் பொருப்பு வணிகம் போன்றவற்றிற்காக செயல்படும் பிரதிநிதித்துவ அலுவலகம் என 9 பன்னாட்டு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.[20] இவற்றோடு சேர்த்து ஆக்சிஸ் யுகே வங்கி லிட் எனப்படும் இதன் துணை நிறுவனத்தின் மூலம் பிரிட்டனிலும் செயல்படுகிறது. சேவைகள்சில்லறை வங்கிஇவ்வங்கி சிறு மற்றும் தனிநபர்களுக்கு கடன்களை வழங்குவதோடு வங்கி அட்டை சேவைகள், இணைய வழி வங்கி, ஏடிஎம், வைப்பகங்கள், நிதி ஆலோசனை சேவைகள், மற்றும் இந்தியாவில் இல்லாத இந்தியர்களுக்கான சேவைகளையும் வழங்குகிறது.[21] பெருநிறுவன வங்கிமுதலீட்டு வங்கி மற்றும் ட்ரஸ்டீ சேவைகள்: ஆக்சிஜன் வங்கி முதலீட்டு வங்கி மற்றும் ட்ரஸ்டீ சேவைகளை தனது துறை நிறுவனங்கள் மூலம் வழங்கிவருகிறது. ஆக்சிஸ் கேபிடல் லிட்., பங்கு மூலதன சந்தை, நிறுவனங்களுக்கான பங்கு தரகர் ஆகிய முதலீட்டு சேவைகளை வழங்கி வருகிறது. ஆக்சிஸ் டிரஸ்டி சர்வீசஸ் லிமிடெட் அறங்காவலர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது, கடன் பத்திர அறங்காவலராகவும் பல்வேறு பாதுகாப்புப் பத்திர அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் செயல்படுகிறது.[22] சர்வதேச வங்கிசிங்கப்பூர், ஹாங்காங், டிஐஎஃப்சி, ஷாங்காய் மற்றும் கொழும்பு ஆகிய கிளைகளின் மூலம் கார்ப்பரேட் வங்கி, வர்த்தக நிதி, கருவூலம் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை வழங்குகிறது, மேலும் ஹாங்காங் மற்றும் கொழும்பில் உள்ள அதன் கிளைகளிலிருந்து சில்லறை பொறுப்பு தயாரிப்புகளையும் வழங்குகிறது.[23] நடப்பு நிதியாண்டில் டாக்காவில் உள்ள பிரதிநிதி அலுவலகம் திறக்கப்பட்டது.[24] பட்டியலிடுதல் மற்றும் பங்குதாரர்ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[21][25] ஆக்சிஸ் வங்கியின் வைப்பு ரசீதுகள்(GDRs) இலண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[26] எம்டிஎன் திட்டத்தில் வெளியிடப்பட்ட இவ்வங்கியின் பத்திரங்கள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சர்ச்சைகள்ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்ஒரு இந்திய இணையப் பத்திரிகை நடத்திய ஆய்வில் இந்தியாவின் முக்கிய மூன்று வங்கிகளின் முக்கிய அதிகாரிகளின் மிகப்பெரிய விதி மீறல்கள் மூலம் நடைபெற்ற பண மோசடி திட்டங்களை வீடியோ ஆதாரங்களுடன் 2013ல் வெளிக்கொண்டு வந்தது. இம்மோசடியில் ஆக்சிஸ் வங்கியும் ஈடுபட்டது. எனவே ரிசர்வ் வங்கி, ஆக்சிஸ் வங்கிக்கு ₹50 மில்லியன், எச்டிஎஃப்சி வங்கிக்கு ₹45 மில்லியன் ஐசிஐசிஐ வங்கிக்கு ₹10 மில்லியன் என அபராதம் விதித்தது.[27] 2016 பணமதிப்பிழப்பு தொடர்பான பணமோசடி2016 பண மதிப்பிழப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பண மோசடிகளில் பல ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.[28] வங்கியின் கடினமான செயல்பாட்டு இலக்கு மற்றும் அதன் பணி கலாச்சாரம் காரணமாக நடந்த தவறுகளுக்கு சில பணியாளர்களை மட்டும் தண்டிப்பது முறையில்லை என சில ஊடகங்கள் கூறினர்.[29] முயற்சிகள்ஆக்சிஸ் தாட் ஃபேக்டரிபுதிய தொழில் முனைவோருக்காக பெங்களூருவில் ஆக்சிஸ் தாட் ஃபேக்டரி எனும் பெயரில் திட்டத்தை முன்னெடுத்தது.[30] இவ்வகையில் இது இந்தியாவிலேயே முதல் முறையாகும்.[31][32][33] ஆஷா வீட்டுக் கடன்கள்ஆஷா வீட்டுக் கடன்கள் முதல் முறை வீடு வாங்க முயல்பவர்களை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட்டது.[34][35] இத்திட்டம் சிறு நகரங்களில்(1மில்லியனுக்கும் குறைவாக மக்கள் தொகை கொண்ட நகரங்கள்) ₹100,000 முதல், பெரு நகரங்களில் ₹2.8 மில்லியன் வரை கடன்களை ₹8000 முதல் ₹10000 வரை வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கியது.[36] இகேஒய்சிஇகேஒய்சி[37] என்பது எந்தவொரு காகித ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் ஆதார் அடிப்படையிலான கேஒய்சி மூலம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களை அனுமதிப்பது ஆகும். இதற்காக ஆக்சிஸ் வங்கி விசா இன்க்(Visa Inc.) உடன் கூட்டு சேர்ந்து இம்முறையை இந்தியாவில் முதல்முறையாக செயல்படுத்த ஆரம்பித்தது..[38] துணை நிறுவனங்கள்ஆக்சிஸ் கேபிடல் லிமிடெட்.ஆக்சிஸ் கேப்பிடல் லிட்., ஆக்சிஸ் வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாக இந்தியாவில் டிசம்பர் 6, 2005ல் நிறுவப்பட்டு மே 2, 2006ல் சேவையை தொடங்கியது. ஈனம் செக்யூரிட்டீஸ் பி. லிட்., நிறுவனத்தின் கீழ்காணும் தொழில்கள் ஆக்சிஸ் கேப்பிடலுடன் இணைக்கப்பட்டன:[39]
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் லிட்., ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் ஐரோப்பா லிட்., மற்றும் ஆக்சிஸ் பைனான்ஸ் லிட்., ஆகிய நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஆக்சிஸ் கேப்பிட்டலின் நேரடி துணை நிறுவனங்களாகின.[சான்று தேவை] ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட்.ஆக்சிஸ் செகியூரிட்டீஸ் லிட்., ஜூலை 21, 2006ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆக்சிஜன் கேப்பிடல் லிட்., தனது பங்கு விற்பனை மற்றும் சில்லறை தரகர் வணிகத்தை, மே 5, 2013ல் ஆக்சிஸ் செக்யூரிட்டிஸுடன் இணைத்தது. கடன் அட்டை மற்றும் சில்லரை தரகர் வசதிகளை வழங்கிவரும் ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியின் முழு சொந்த நிறுவனமாகும்.[40] ஆக்சிஸ் பிரைவேட் ஈக்விட்டி லிமிடெட்.முதலீடுகள், துணிகர முதலீடுகள் மற்றும் பிற நாட்டு நிதிகளை கையாளும் ஆக்சிஸ் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் அக்டோபர் 3, 2006ல் பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 4, 2006ல் தனது பணிகளை தொடங்கியது. ஆக்சிஸ் பரஸ்பர நிதியம்ஆக்சிஸ் பரஸ்பர நிதியம் 2009ல் மும்பையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்ட்டது. ஆக்சிஸ் ஈக்விட்டி ஃபண்ட் என்பது இதன் முதல் பரஸ்பர நிதி திட்டமாகும். இந்தியாவின் முதல் இகேஒய்சி எனப்படும் காகிதம் இல்லாமல் வாடிக்கையாளர்களை இணைக்கும் முறையை அறிமுகப்படுத்திய நிதி சேவை நிறுவனம் இதுவே ஆகும். கையகப்படுத்துதல்2017ம் ஆண்டு ஃப்ரீசார்ஜ் எனப்படும் இணையவழி நிதி சேவை நிறுவனத்தை சமார் ₹385 கோடிக்கு வாங்கியது.[41] விருதுகள்2010
2011
2012
2013
மேலும் காண்க
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia