ஆக்சோடிரைகுளோரோபிசு(டிரைபீனைல்பாசுபீன்)இரேனியம்(V)ஆக்சோடிரைகுளோரோபிசு(டிரைபீனைல்பாசுபீன்)இரேனியம்(V) (Oxotrichlorobis(triphenylphosphine)rhenium(V)) என்பது ReOCl3(PPh3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்துடன் காற்றில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படும் இந்த அணைவுச் சேர்மம், பல இரேனியம் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. டயா காந்தப்பண்பைப் பெற்றுள்ள இந்த அணைவுச் சேர்மத்தில் ஓர் ஆக்சோ, மூன்று குளோரோ மற்றும் தங்களுக்குள் மாறிக்கொள்ளும் இரண்டு டிரைபீனைல் ஈந்தணைவிகள் கொண்ட எண்முக ஒருங்கிணைப்பில் இரேனியம் உள்ளது. மேலும் இரேனியத்தின் ஆக்சிசனேற்ற எண் +5 ஆகவும் எலக்ட்ரான் அமைப்பு d2 ஆகவும் காணப்படுகிறது.
தயாரிப்புReOCl3(PPh3)2 வர்த்தக முறையில் கிடைக்கிறது. பெர் இரேனிக் அமிலத்துடன் ஐதரோ குளோரிக் அமிலமும் அசிட்டிக் அமிலமும் கலந்த கலவையிலுள்ள டிரைபீனைல்பாசுபீன் சேர்த்து வினை புரியச் செய்வதன் மூலமாக இதை தயாரிக்கலாம். இவ்வினையின்போது Re(VII) நிலை Re(V) நிலைக்கு ஒடுக்கப்படுகிறது, இதேபோல டிரைபீனைல்பாசுபீன் அதன் ஆக்சைடாக ஆக்சிசனேற்றப்படுகிறது.
வினைக்குத் தேவையான பெர் இரேனிக் அமிலம் இரேனியம்(VII) ஆக்சைடைப் பயன்படுத்தி தளத்திலேயே தயாரித்துக் கொள்ளப்படுகிறது. பயன்கள்பிற ஆக்சோ, நைட்ரிடோ, ஐதரிடோ அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமாக ReOCl3(PPh3)2 பயன்படுகிறது. LiAlH4 உடன் சேர்த்து சூடுபடுத்தும்போது இது ReH7(PPh3)2 ஆக மாற்றமடைகிறது.[1] இரண்டாம்நிலை ஆல்ககால்களை டைமெத்தில் சல்பாக்சைடைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தினால் தொடர்புடைய கீட்டால்கள் உருவாகின்றன. [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia