ஆங்கிலப் பெயர்ச்சொல்பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இவ்வகைப் பெயர்ச்சொல், ஒரு பொருளையோ, ஒரு இடத்தையோ, ஒரு தொழிலையோ, ஒரு காலத்தையோ அல்லது ஒரு பெயரையோ குறிக்க உதவுகின்றது. இதை ஆங்கிலத்தில் Noun என்பர். (எ-டு) மரம், குமார், குழந்தை, கை, அவனுடைய, அவளுடைய. இவை, பொதுவாக ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ, ஒரு இடத்தையோ அல்லது ஒரு எண்ணத்தையோ ஒருவர் மற்றவரிடம் கூறவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ உதவுகிறது.[1][2][3] பெயர்ச்சொல்லின் வகைகள் (Types of Nouns)௧.Proper Nounஒரு மனிதரினுடைய பெயரையோ அல்லது ஒரு இடத்தினுடைய பெயரையோ தனியாகக் குறிப்பிட்டு சொல்லும் பெயர்ச்சொல்லின் பெயர் ஆகும்.
௨.Improper Noun௩.Countable Noun௪.Uncountable Nouns௫.Common Nouns௬.Abstract Nouns௭.Collective Nounsபெயர்ச்சொற்குறிகள் (The Articles)ஆங்கிலத்தில் a, an, the என மூன்று ஆர்டிகல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் the definite article, the indefinite article என article இருவகைப்படும். ௧.The Definite ArticleThe எனப்படும் ஆங்கிலச் சொல் Definite Article என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொருளைக் குறிப்பிட்டு கூறும் பொழுதே உபயோகிக்கப் படுகிறது.
௨.The Indefinite ArticleA, an என்கிற இவ்விரண்டும் Indefinite Article எனப்படும். இவை எந்த ஒரு பொருளையும் குறிப்பிட்டு சொல்ல பயன்படுத்தப்பட மாட்டாது.
எண் (Number)தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் இரண்டு எண்கள் உள்ளன. அவை, ஒருமை(singular) மற்றும் பன்மை(plural) ஆகும். ௧.ஒருமைப் பெயர்ச்சொல் (Singular Noun)௨.பன்மைப் பெயர்ச்சொல் (Plural Noun)
பால் (Gender)ஆங்கிலத்தில் மூன்று பால்கள் உள்ளன. அவை, masculine gender (ஆண்பால்), feminine gender (பெண்பால்) மற்றும் neuter gender(ஒன்றன் பால்). ௧.ஆண்பால் (Masculine gender)ஆண்களைக் குறிக்கும் சொல் ஆண்பால்(Masculine gender) எனப்படும். ௨.பெண்பால் (Feminine gender)பெண்களைக் குறிக்கும் சொல் பெண்பால்(Feminine gender) எனப்படும். ௩.ஒன்றன் பால் (Neuter gender)ஆண்பாலையும் பெண்பாலையும் ஒன்றி வராத மற்ற அஃறிணை சொற்கள் ஒன்றன் பால் (Neuter gender) எனப்படும்.
வேற்றுமை (Case)ஆங்கிலத்தில் மூன்று வேற்றுமைகள் உள்ளன. அவை, nominative case, accusative case, dative case என்பனவாகும். ஆனால், தமிழுக்குள்ளது போல் ஆங்கில வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது. (அதாவது, ஆங்கில வேற்றுமைகள் வேற்றுமை உருபுகளைக் கொள்வதில்லை.) (i.e. Cases in English do not have any noun inflections.) ௧.எழுவாய் வேற்றுமை (Nominative case)Nominative case எனப்படுவது தமிழிலுள்ள முதல் வேற்றுமையே (எழுவாய் வேற்றுமையே) ஆகும். ௨.இரண்டாம் வேற்றுமை (Accusative case)Accusative case எனப்படுவது தமிழிலுள்ள இரண்டாம் வேற்றுமையே ஆகும். ௩.நான்காம் வேற்றுமை (Dative case)Dative case என்பது தமிழிலுள்ள நான்காம் வேற்றுமையே ஆகும். ௪.ஆறாம் வேற்றுமை (Genitive case)இன்றைய அளவில் ஆங்கிலத்தில் இவ்வேற்றுமை அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, இன்று பயன்படுத்தப்படும் my/mine(என்னுடையது), your/yours (உன்னுடையது), our/ours (நம்முடையது) என்பன போன்ற சொற்களிலேயே காணப்படுகிறது. இதைத்தவிர்த்து வேறு எங்கும் காணப்படுவதில்லை.
மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia