ஆடிப் பௌர்ணமி

ஆடி பௌர்ணமி பூசை என்பது ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இந்து சமய கோயில்களில் கடவுள்களுக்கு நடத்தப்படும் பூசையாகும்.[1] இந்த நாளில் பால்திரட்டும், கருப்பு பட்டாடையும், கருஊமத்தைப்பூவால் ஆன மலையையும் உபயோகின்றனர். மூங்கில் அரிசி பாயசமும் படைக்கும் பொருளாக உள்ளது.

இந்து சமயக் கோயில்களில் திரட்டுப்பால் அபிசேகமும், நாரத்தம் பழ சாதம் நிவேதிதமும் செய்யப்படுகின்றன. இந்தநாளில் யாகம் அமைக்க சோடச வடிவத்திலான யாகக்குண்டத்தினை அமைக்கின்றனர்.

  • இந்நாளில் உத்திராட நட்சத்திரம் கூடிவருமாம். இதனால் விநாயகருக்கு சிறப்பான நாளாக கூறப்படுகிறது.
  • இந்த பௌணர்மி பூசை திருச்சிராப்பள்ளி மாவட்டம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் சிறப்பாக செய்யப்படுகிறது.

ஆதாரங்கள்

  1. தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya