ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ![]() ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ (Otto Wilhelm von Struve) (மே 7, 1819 (Julian calendar: ஏப்பிரல் 25) – ஏப்பிரல் 14, 1905) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். உருசிய மொழியில் இவர் பெயர் வழக்கமாக, ஆத்தோ வாசில்யேவிச் சுத்ரூவ (Otto Vasil'evich Struve) (Отто Васильевич Струве) என அமைகிறது. இவரது தந்தையார், [[பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம் வான் சுத்ரூவ]வும் இவரும் 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர்களாக்க் கருதப்படுகின்றனர். இவர் 1862 முதல் 1889 வரை புல்கொவோ வான்காணகத்தின் தலையேற்றிருந்தார். இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் முன்னணி உறுப்பினராக விளங்கினார். சொந்தவாழ்க்கையும் இறுதிக் காலமும்![]()
தகைமைகளும் விருதுகளும்இவர் 1840 இல் வெளியாகிய "சூரியக் குடும்பத்தின் சீரியக்கத்தின் தலையாட்ட மாறிலியைத் தீர்மானித்தல்" எனும் ஆய்வுரைக்காக 1950 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தை வென்றார் .[1][2] இவர் 1852 முதல் 1889 வரை சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராக இருந்தார்.அதேகாலத்தில் இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தில் உறிப்பினராக இருந்து, 1856 இல் அதன் கல்வியியலாலரானார். இவர் 1874இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினரானார்.[3] குறுங்கோள் 768 சுத்ரூவீனா ஆட்டொ வில்கெல்ம், பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், எர்மன் சுத்ரூவ ஆகியோரின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது;[4] நிலாவின் சுத்ரூவ குழிப்பள்ளம் வேறு மூன்று சுத்ரூவ குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அழைக்கப்படுகிறது:அதாவது. பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், ஆட்டோ விகெல்ம், ஆட்டோ சுத்ரூவ ஆகியோரின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. சுத்ரூவ புவியளவை வில் (Struve Geodetic Arc) 2005 இல் உலக மரபுப் பட்டியலில் சேர்க்கபட்டது.[5] மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia