ஆண்டிமடம்
ஆண்டிமடம் (Andimadam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து கிராமமாகும். இது 16.09.2016-இலிருந்து ஒரு வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் அதிகமாக காணப்படுவதால் சிமெண்ட் நகரம் என அழைக்கப்படுகிறது. ஆண்டிமடம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மக்கள்தொகை2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6633 ஆண்கள் 3315 பெண்கள் 3318.[1]இது அரியலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வடகிழக்கில் 242 கி.மீ. தொலைவில் சென்னை அமைந்துள்ளது. தென்மேற்கில் 111 கி.மீ. தொலைவில் திருச்சியும், தென்கிழக்கில் 23 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது. பார்க்க வேண்டியவை![]() பழமை வாய்ந்த சிவன் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது[2].(மேல அகத்தீச்வரர் ஆலயம் விளந்தை ஆண்டிமடம்[தொடர்பிழந்த இணைப்பு]). இக்கோவிலின் சிவலிங்கம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலைச்சுற்றி ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளது. மேலும் இங்கு புகழ் பெற்ற புனித மார்த்தினார் ஆலயம் அமைந்துள்ளது. ![]() ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia