ஆண்டிமனி ஆக்சிகுளோரைடு (Antimony oxychloride) என்பது SbOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். 15 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்ட இச்சேர்மம் ஏராளமான இரசவாதப் பெயர்களால் அறியப்படுகிறது. இச்சேர்மம் ஒரு வாந்தி ஊக்கி மற்றும் மலமிளக்கியாகச் செயல்படுவதால், முதலில் சுத்திகரிப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.
வரலாறு
ஆண்டிமனி ஆக்சிகுளோரைடு உற்பத்தியை முதலில் பாசில் வாலண்டைன் கர்ரசு டிரையம்பாலிசு ஆண்டிமோனியில் விவரித்தார். 1659 ஆம் ஆண்டில், இயோகன் ருடால்ஃப் கிளாபர் இவ்வினைக்கு ஒப்பீட்டளவில் சரியான இரசாயன விளக்கத்தை அளித்தார்.
விட்டோரியோ அல்கரோட்டி இந்த பொருளை மருத்துவத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் இவரது பெயரின் வழித்தோன்றல்களான அல்கரோட்டு, அல்கோரோத்து ஆகியன பல ஆண்டுகளாக இந்த சேர்மத்துடன் தொடர்புடையவையாக உள்ளன.
சரியான கலவை நீண்ட காலமாக அறியப்படவில்லை. SbOCl என்பது ஆண்டிமனி டிரைகுளோரைடு மற்றும் ஆண்டிமனி ஆக்சைடு அல்லது தூய SbOCl ஆகியவற்றின் கலவையாகும் என்ற கருத்து எழுப்பப்பட்டது. இன்று ஆண்டிமனி டிரைகுளோரைடின் நீராற்பகுப்பு வினை புரிந்து கொள்ளப்படுகிறது; முதலில் SbOCl ஆக்சிகுளோரைடு உருவாகிறது, இது பின்னர் Sb4O5Cl2 சேர்மத்தை உருவாக்குகிறது.
இயற்கைத் தோற்றம்
SbOCl அல்லது பிந்தைய சேர்மம் இயற்கையாகத் தோன்றாது. இருப்பினும், ஓனோரடோயிட்டு என்பது அறியப்பட்ட Sb-O-Cl கனிமமாகும். இதன் கலவை Sb8Cl2O11 ஆகும்.[2][3][4][5][6]
↑Nurgaliev, B. Z.; Popovkin, B. A.; Novoselova, A. V. (1981). "Physiochemical analysis of antimony trioxide–antimony trichloride, antimony trioxide–antimony tribromide systems". Zhurnal Neorganicheskoi Khimii26 (4): 1043–1047.
↑Belluomini, G.; Fornaseri, M.; Nicoletti, M. (2018). "Onoratoite, a new antimony oxychloride, from Cetine di Cotorniano, Rosia (Siena, Italy)". Mineralogical Magazine and Journal of the Mineralogical Society36 (284): 1037–1044. doi:10.1180/minmag.1968.036.284.01. பன்னாட்டுத் தர தொடர் எண்:0369-0148.
↑Roper, Adam J.; Leverett, Peter; Murphy, Timothy D.; Williams, Peter A. (2018). "The stability of onoratoite, Sb8O11Cl2, in the supergene environment". Mineralogical Magazine78 (7): 1671–1675. doi:10.1180/minmag.2014.078.7.10. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-461X.
↑Lavoisier, Antoine-Laurent de (1743-1794). Auteur du texte (1789). Traité élémentaire de chimie, présenté dans un ordre nouveau, et d'après les découvertes modernes; Avec figures; Par M. Lavoisier,... [Treatise Elementary of Chemistry, Presented in a New Order, and after the Discoveries Modern; with Figures; by M. Lavoisier, ... (author of text)] (in பிரெஞ்சு). France: A Paris, chez Cuchet, libraire, rue & hôtel Serpente. M. DCC. LXXXIX. Sous le privilège de l'Académie des sciences & de la Société royale de médecine. pp. Préliminaire XXV, "poudre d'algaroth".{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
Soukup, Rudolf Werner (1999). "Chemiehistorische Experimente: Erze als Ausgangsprodukte für die Herstellung von Arzneimitteln". CHEMKON6 (4): 171–177. doi:10.1002/ckon.19990060403.
Särnstrand, C. (1978). "The crystal structure of antimony(III) chloride oxide Sb4O5Cl2". Acta Crystallographica Section B34 (8): 2402–2407. doi:10.1107/S056774087800833X. Bibcode: 1978AcCrB..34.2402S.
Hentz, F. C.; Long, G. G. (1975). "Synthesis, properties, and hydrolysis of antimony trichloride". Journal of Chemical Education52 (3): 189. doi:10.1021/ed052p189. Bibcode: 1975JChEd..52..189H.
Edstrand, Maja; Brodersen, Rolf; Sillén, Lars Gunnar; Linnasalmi, Annikki; Laukkanen, Pentti (1947). "On the Crystal Structure of the Antimony Oxychloride Sb4O5Cl2 and Isomorphous Oxybromide". Acta Chemica Scandinavica1: 178–203. doi:10.3891/acta.chem.scand.01-0178.
Moscardo, Lodovico (1668). Historia di Verona. Rossi. p. 441. Retrieved 25 May 2013.
Dehnicke, Kurt (1961). "Über Antimon(V)-oxidchloride" (in de). Zeitschrift für Anorganische und Allgemeine Chemie312 (5–6): 237–243. doi:10.1002/zaac.19613120503.