ஆண்டிமனி நான்காக்சைடு
ஆண்டிமனி நான்காக்சைடு அல்லது ஆண்டிமனி டெட்ராக்சைடு (Antimony tetroxide) என்பது Sb2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இயற்கையில் இச்சேர்மப் பொருள் செர்வண்டைட் என்ற கனிமப்பொருளாகக் காணப்படுகிறது[2]. வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் சூடுபடுத்தும்போது மஞ்சள் நிறமாக மாறுகிறது. SbO2 என்ற ஆண்டிமனி நான்காக்சைடின் முற்றுப்பெறா வாய்ப்பாடு, இரண்டு ஆண்டிமனி மையங்களின் இருப்பைத் தெரிவிக்கிறது. தயாரிப்பு மற்றும் அமைப்புஆண்டிமனி மூவாக்சைடை காற்றில் சூடாக்கும்போது ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:[3]
800 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆண்டிமனி(V) ஆக்சைடு ஆக்சிசனை இழந்து ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:
இச்சேர்மம் கலப்பு இணைதிறன் அமைப்பைக் கொண்டு ஆண்டிமனி(V) மற்றும் ஆண்டிமனி(III) உலோக மையங்களைப் பெற்றுள்ளது. ஆண்டிமனி நான்காக்சைடு சாய்துரம் மற்றும் ஒற்றைசரிவு உருவமைப்பு என்ற இரண்டு வகையான பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது[1]. இரண்டு வடிவங்களிலும் நான்கு ஆக்சைடுகளால் கட்டப்பட்ட உருக்குலைந்த ஆண்டிமனி(III) மையங்கள் அடுக்கப்பட்டு உருவான எண்முக அமைப்புகள் வெளிப்படுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia