ஆண்டி செர்கிஸ்
ஆண்ட்ரூ கிளெமென்ட் செர்கிஸ் (ஆங்கிலம்: Andrew Clement Serkis)[1] (பிறப்பு: 20 ஏப்ரல் 1964) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர், இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ் (2001–2003), ஹாபிட்[2] (2012), ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஆப்ஸ் (2011-2017) போன்ற திரைப்படங்களில் அசைவூட்டும் கணனி கதாபாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் ஆவார். மேலும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த நடிகர்களில் ஒருவராவார்.[3][4][5] இவரின் நடிப்புத்திறனுக்காக ஒரு எம்பயர் விருது மற்றும் இரண்டு சனி விருதுககளைப் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்[6] மற்றும் பிளாக் பான்தர் (2018) போன்ற திரைப்படங்களில் 'யுலிஸஸ் கிளாவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia