ஆதலையூர் பீமேசுவரர் கோயில்

ஆதலையூர் பீமேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

கும்பகோணம்-நாகப்பட்டினம் சாலையில் திருக்கண்ணபுரத்திற்கு அருகே 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

பாண்டவர்கள் தாம் இழந்த நாட்டை மீண்டும் பெற கோயில்களுக்குத் தல யாத்திரையாகச் சென்றபோது பீமன் இங்கு வந்து இக்கோயிலின் அருகேயுள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு அருள் பெற்றதால் மூலவர் பீமேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவனைத் தேடி வந்து பசு வடிவத்தில் இங்கே கண்ட இறைவி ஆனந்தம் அடைந்து ஆனந்தநாயகி என்னும் பெயரைப் பெற்றார்.[1]

சிறப்பு

இக்கோயில் குளத்தில் நீராடுவோருக்கு மங்கள இசை கேட்பதாகக் கூறுகின்றனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya