ஆதாமின் உருவாக்கம்

ஆதாமின் உருவாக்கம்
ஓவியர்மைக்கலாஞ்சலோ
ஆண்டுஏறக்குறைய 1511
வகைசுதை ஓவியம்

ஆதாமின் உருவாக்கம் அல்லது ஆதாமின் படைப்பு (The Creation of Adam) என்பது ஏறக்குறைய 1511 இல் மைக்கலாஞ்சலோவினால் சிசுடைன் சிற்றாலய உட்கூரையில் வரையப்பட்ட சுதை ஓவியங்களில் ஒரு பகுதி ஆகும். இது படைப்பு பற்றிய விவிலிய தொடக்க நூலின் விவரிப்பின் படி முதல் மனிதனான ஆதாமுக்கு கடவுள் உயிர் மூச்சை அளித்ததைச் சித்தரிக்கும் ஓவியமாகும். இது சிஸ்டைன் சிற்றாலய உட்கூரை ஓவியங்களில் சிறப்புமிக்கதும், லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசாவுடன் ஒப்பிடத்தக்கவாறு புகழ் பெற்றதும் ஆகும். கடவுளினதும் ஆதாமினதும் தொட்டுவிடும் அளவிலுள்ள கைகள் மானிடத்தின் மிகவும் போற்றப்படும் தனி படங்களில் ஒன்றாகவும், எண்ணிக்கையற்ற அளவிலும் கேலிக்குள்ளாக்கப்பட்டு மீளவும் உருவாக்கப்பட்ட படமாகும். லியொனார்டோ டா வின்சியின் இறுதி இராவுணவு, "ஆதாமின் உருவாக்கம்" மற்றும் சிஸ்டைன் சிற்றாலய ஓவியங்கள் என்பன எல்லாக் காலத்திலும் அதிக முறை மீளவும் உருவாக்கப்பட்ட சமய ஓவியங்கள் ஆகும்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya