ஆத்தர் சுரூஸ்புரி
ஆத்தர் சுரூஸ்பதி (Arthur Shrewsbury, பிறப்பு: ஏப்ரல் 11 1856, இறப்பு: ஏப்ரல் 19 1903 ) என்பவர் முன்னாள் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 498 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1881 -1893 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். முதல் தரத் துடுப்பாட்டம்1874 ஆம் அண்டுகளில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் இவருக்கு காய்ச்சல் இருந்ததானால் விளையாட இயலவில்லை. [1] 1875 ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்சயரில் நடைபெற்ற டெர்பிசயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தத் தொடரில் 313 ஓட்டங்களை 17.38 எனும் சராசரியோடு எடுத்தார்.[2] அதில் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.[3] 1875 ஆம் ஆண்டில் டிடெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற யார்க்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் அவர் 118 ஓட்டங்களை எடுத்தார் மேலும் ரிச்சர்டு டஃப்டுடன் இணைந்து 1893 ஓட்டங்களை எடுத்தனர். மே 1877 இல் ஓவலில் ஜெண்டில்மேன் அணிக்கு எதிரான போட்டியில் 119 ஓட்டங்களை எடுத்தார்.அந்தத் தொடரில் 778 ஓட்டங்களை 19.94 எனும் சராசரியோடு எடுத்தார். அதில் நான்கு ஐமதுகளும் அடங்கும்.[4] சர்வதேசப் போட்டிகள்1882 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 31 , இல் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 ஓட்டங்கள் எடுத்து எவான்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 19 ஓவர்களை வீசி மூன்று ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 16 ஓட்டங்கள் எடுத்து கூப்பரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.[5] 1883 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்ட் 31 இல் மான்செஸ்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து கிஃபன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[6] முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிக்கு முன்பாக இரு முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விஒளையாடியது. முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. அதற்குப் பிறகு நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஏழு போட்டிகளில் விளையாடினார். 1884-85 ஆம் ஆண்டுகளில் லில்லி ஒயிட், ஷா மற்றும் சுர்ருஸ்பதி ஆகியோர் ஆத்திரேலியாவிற்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.அந்த அணியின் தலைவராக சுரூஸ்பதி தேர்வானார். அடிலெய்டுவில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கமாலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 26 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். இரண்டாவது போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 72 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 2 இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 இலக்குகளில் ( ஓட்டம் எடுக்கவில்லை) அணி வெற்று பெற உதவினார். மெல்போனில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் தனது முதல் நூரு ஓட்டங்களை எடுத்தார்.[7] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia