ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி (முன்னர் தெற்கு நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப்பட்டது Australia women's national cricket team ) என்பது பன்னாட்டு பெண்கள் துடுப்பாட்டத்தில் ஆத்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தற்போது மெக் லானிங்கின் தலைவராகவும், மத்தேயு மோட் பயிற்சியாளராகவும் உள்ளனர். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர். [8]
விக்டோரியாவின் பெண்டிகோவில் 1874 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆத்திரேலியாவில், பெண்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். 1900 களின் முற்பகுதியிலிருந்து மாநில அளவிலும், 1931-32 முதல் தேசிய அளவிலும் விளையாடினர். ஆஸ்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட வாரியம் (ஏ.டபிள்யூ.சி.சி) மார்ச் 1931 இல் தேசிய அளவில் விளையாட்டை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது.