ஆத்துப்பாளையம் அணை
ஆத்துப்பாளையம் அணை (Aathupalayam Dam) என்பது தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம், க. பரமத்தி வட்டம், கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இதன் மூலம் ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வரும் உபரி நீரையும், கீழ் பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரையும் தேக்கி வைத்து, கரூர் மாவட்டத்தில் 19,000 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. அணை கட்டி முடிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்தது. அதன்பிறகு திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாய நிலங்கள் பாழாயின. இதனால் இதிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.[2] வரலாறுஇந்த அணையின் கட்டுமான பணி 1980 இல் துவங்கப்பட்டது தொழில்நுட்ப சிக்கல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு தாமதங்கள் போன்றவற்றால் பணிகளை முடிக்க பத்தாண்டுகள் தாமதம் ஆனது. 1995 ஆம் ஆண்டுக்குப் பின் அணை நீரில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்தது. இதனால் அணை நீர் வேளாண்மைக்குத் தகுதியற்றதாக ஆனது.[சான்று தேவை] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia