ஆத்மிகா, கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்துக்கு திரைப்படத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. இவர், எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடிப்பதற்காக சென்னை சென்றார்.[1] இவருடைய தந்தை 26 ஜூன் 2020 அன்று இறந்து போனார்.[2]
தொழில்
ஆத்மிகா,ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்து தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது நடிப்பு ஆர்வம் கல்லூரியிலேயே தொடங்கியது, அங்கு இவர் சில குறும்படங்களின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், இரண்டு விளம்பரங்களிலும் தோன்றினார். இவரது சுயவிவரத்தைக் கண்ட ஆதித்யா என்கிற ஹிப்ஹாப் தமிழா இவரை மீசையா முருக்கு என்ற தமிழ் படத்தில் முக்கிய பெண் வேடத்தை வழங்கினார்.[3][4] அந்த படத்தில் ஆத்மிகாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.[5][6][7][8]துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய இவரது இரண்டாவது படமான நரகாசுரன் திரைப்படத்தில் 2017 இல் நடித்தார்.[9][10] அதே ஆண்டில் இவர் ஓப்போ சென்னை டைம்ஸ் ஃப்ரெஷ் பேஸ் 2017 என்ற போட்டியில் நடுவராக இருந்தார்.[11]
2018இல், காட்டேரி என்ற படத்தில் மூன்று பெண் முன்னணி வேடங்களில் நடிகை ஓவியாவிற்கு பதிலாக நடித்தார்.[12] பிப்ரவரி 2019இல், இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மு. மாறனின் "கண்ணை நம்பாதே" என்ற பரபரப்புத் திரைபடத்தில் நடித்தார்.[13] செப்டம்பர் 2020இல், இவர், ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய அரசியல் படமான "கொடியில் ஒருவன்" படத்தின் நடித்தார்.[14][15]