ஆந்திரப் பிரதேசம் (பத்திரிகை)ஆந்திரப் பிரதேசம் (பத்திரிகை) (Andhra Pradesh (magazine)) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் கொண்டுவரப்பட்ட ஓர் அதிகாரப்பூர்வ மாத இதழாகும்.[1] [2][3] இந்த இதழ் 1952ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[4] ஐதராபாத்திலிருந்து ஆங்கிலம், தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் வெளியிடப்பட்டது.[5] ஆந்திரப் பிரதேச அரசு மேற்கொண்ட வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இப்பத்திரிகை வழங்கியது. ஆளுமை மேம்பாடு, நகைச்சுவை, தொழில் ஆலோசனை, பொழுதுபோக்கு, சிறுகதைகள் மற்றும் கவிதை பற்றிய சுவாரசியமான கட்டுரைகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிடப்பட்டன. ஆந்திரப் பிரதேசம் (பத்திரிகை) இதழின் இணையவழி பதிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் தெலுங்கானா பிரிந்த பிறகு, உருது மொழியில் வெளியீடு நிறுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு சூன் மாத இதழுடன் இதழின் வெளியீடு நிறுத்தப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia