இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
ஆந்த்தரனிலிக் அமிலம் அல்லது o – அமினோ பென்சோயிக் அமிலம்(Anthranilic acid (or o-amino-benzoic acid) என்பது C6H4(NH2)(CO2H).. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரோமாட்டிக் அமிலம் ஆகும். பதிலீடு செய்யப்பட்ட பென்சீன் வளையத்தால் இம்மூலக்கூறு ஆக்கப்பட்டிருப்பதால் இதை அரோமாட்டிக் வகை அமிலம் என்கிறார்கள். பென்சீன் வளையத்தில் அடுத்தடுத்துள்ள நிலைகளில் அல்லது ஆர்த்தோ நிலையில் வேதி வினைக்குழுக்களானகார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஒரு அமீன் குழுக்கள் இணைந்துள்ளன. இதன்விளைவாக இச்சேர்மம் இருநிலைத் தன்மையுடன் காணப்படுகிறது. தூய்மையான நிலையில் ஆந்த்தரனிலிக் அமிலம் பார்ப்பதற்கு வெண்மை நிறப் படிகமாக இருந்தாலும் வணிக மாதிரிகள் மஞ்சளாக இருக்கின்றன. இனிப்புச்சுவையுடன் உள்ள இதை சில சமயங்களில் உயிர்சத்து எல் 1 என்றும் அழைக்கிறார்கள[2] ஆந்த்தரனிலிக் அமிலத்தை புரோட்டான் நீக்கம் செய்து [C6H4(NH2)(CO2)]−, ஆந்த்தரனிலேட்டுஎதிர்மின் அயனி பெறப்படுகிறது.
அமைப்பு
அமினோ அமிலம் என்று இது எப்போதும் அழைக்கப்படாவிட்டாலும் திண்மநிலை ஆந்த்தரனிலிக் அமிலத்தில் அமினோ தொகுதியும் கார்பாக்சிலிக் அமிலமும் இடம்பெற்றுள்ளதால் இதன் அமைப்பு சிவெட்டெரோனிக் அல்லது இருமுனை அயனி அமோனியம் கார்பாக்சிலேட்டு வடிவத்தில் உள்ளத[3]
தயாரிப்பு
ஆந்த்தரனிலிக் அமிலத்தைத் தயாரிப்பதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அமீனேற்றத்தில் தொடங்கி தாலிக் நிரிலியில் இருந்து தயாரிக்கும் முறை தொழிற்சாலைகளில் பயன்படுகிறத
C6H4(C(O)NH2)CO2Na + HOCl → C6H4NH2CO2H + NaCl + CO2
இதேபோன்றதொரு மற்றொரு முறையில் நீரிய சோடியம் ஐதராக்சைடில் , தாலமைடுடன் சோடியம் ஐப்போபுரோமைட்டைச் சேர்த்து நடுநிலையாக்குதல் வழியாகவும் இது தயாரிக்கப்படுகிறத [5] தாவரங்களில் இருந்து பெறப்படும் இண்டிகோ சாயத்தை நிலைதாழ்த்தும் வினைக்கு உட்படுத்தி ஆந்த்தரனிலிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
டிரிப்தோபன் அமினோ அமிலத்திற்கு ஆந்த்தரலினேட்டு ஒரு முன்னோடியாகும்.
ஆந்த்தரனிலிக் அமிலத்தை கோரிசுமிக் அமிலத்தில் இருந்து உயிரியல் தொகுப்பு முறையிலும் தயாரிக்கலாம். டிரிப்தோபன் என்ற அமினோ அமிலம் தயாரிப்பதற்கு இவ்வமிலம் முன்னோடியாக இருக்கிறது. இவ்வினையில் அமீன் தொகுதியுடன் பாசுபோரிபோசில் பைரோபாசுபேட்டு சேர்க்கப்படுகிறது.