ஆனந்த்

ஆனந்த் (பி. 1951) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை, கவிதை குறித்த கட்டுரைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறையில் பணி புரிந்தார். தற்போது மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் உள்ளார். இவரது நூல்கள் வருமாறு:

கவிதைத் தொகுப்புகள்

  1. அவரவர் கை மணல்
  2. அளவில்லாத மலர்
  3. காலடியில் ஆகாயம்
  4. இளவரசி கவிதைகள்

குறுநாவல்கள்

  1. இரண்டு சிகரங்களின் கீழ்
  2. நான் காணாமல் போகும் கதை

நாவல்

சுற்றுவழிப்பாதை - ஜனவரி 2020-ல் வெளியிடப்பட்டது. காலச்சுவடு வெளியீடு

சிறுகதைகள்

  1. வேர்நுனிகள்

கட்டுரைத் தொகுப்பு

  1. கவிதை என்னும் வாள்வீச்சு
  2. காலவெளிக்காடு

மொழிபெயர்ப்பு நூல்கள்

1. ‘க’ - ராபர்ட்டோ கலாஸ்ஸோ(இத்தாலிய மூலம்) 2. அறியப்பாடாத தீவின் கதை - ஜோஸே ஸாரமாகோ(போர்ச்சுகீஸிய மூலம்) 3. மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன்(பெல்ஜிய மூலம்)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya