ஆன்டி இந்தியன்
ஆன்டி இந்தியன் (Anti Indian) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அரசியல் நையாண்டித் திரைப்படமாகும். இதை சி. இளமாறன் எழுதி இயக்கியிருந்தார். ஆதாம் பாவா தயாரித்திருந்தார். இப்படத்தில் நீலச் சட்டை இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், 'வழக்கு எண்' முத்துராமன், வேலு பிரபாகரன், கில்லி மாறன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். [1] படம் 10 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. [2] கதைச் சுருக்கம்தமிழ்நாட்டின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வருகிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இடைத்தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பாஷா இறந்துவிடுகிறார். தேர்தல் நேரம் ஆனதால் இறந்தவரை அடக்கம் செய்ய பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன.[3] நடிப்பு
தயாரிப்புபிரபல வலை தள திரைப்பட விமர்சகரான நீலச்சட்டை சட்டை மாறன் எனப்படும் இளமாறன் 2019ஆம் ஆண்டு தான் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆன்ட்டி இந்தியன் எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்றார். இதையடுத்து படத்தின் முதல் தோற்றம் 2021, ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது.[4][5] படத்தின் முதல் தோற்றமானது மூன்று சமயங்கள், சமகால அரசியல் போன்றவற்றை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இதில் உள்ள குறியீடுகள் மற்றும் நையாண்டிகள் சர்ச்சையைக் கிளப்பும்படி உள்ளதென சினிமா ஆர்வலர்கள் பலர் கருத்துக்களை கூறினர்.[6] தணிக்கைச் சான்றிதழ்இந்தப் படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. நீலச் சட்டை மாறன் தனது படத்தை பெங்களூரில் உள்ள திருத்தக் குழு குழுவிடம் ஏப்ரல் 5,2021 அன்று பரிசீலனைக்காக சமர்ப்பித்தார். அதன் முடிவு அவருக்கு அன்றே தெரிவிக்கப்பட்டது.[7] தணிக்கை வாரியத்தின் திருத்தக் குழு 38 மாற்றங்களைச் செய்யுமாறு படத்தின் தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளதாக கூறப்பட்டது. உத்தா பஞ்சாப், பத்மாவத் படங்களுக்குப் பிறகு, திருத்தக் குழுவிலிருந்து பல வெட்டுக்களை எதிர்கொண்ட படம் ஆண்டி இந்தியன் என்று கூறப்படுகிறது.[8] [9] இதன் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், தணிக்கைக் குழுவின் முந்தைய குழுக்களின் பரிந்துரைகளை நிராகரித்ததுடன், புதிய குழுவை அமைக்கவும், சரியான வெட்டுக்களுடன் தகுந்த சான்றிதழை வழங்குமாறும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு புதிய குழு படத்தைப் பார்த்து, மூன்று சிறிய திருத்தங்களை மட்டுமே பரிந்துரைத்து U/A சான்றிதழுடன் அனுமதித்தது. [10] [11] திரைப்பட விழாக்களில்இப்படமானது பிரான்சில் நடைபெறவுள்ள கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.[12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia