ஆபிரிக்க-ஆசிய மொழிகள்![]() ஆபிரிக்க-ஆசிய மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிகள் என்பன, வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, சாஹேல், மற்றும் தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களில், அண்ணளவாக 28.5 கோடி மக்களால் பேசப்படுகின்ற சுமார் 240 மொழிகளை உள்ளடக்கிய மொழிக்குடும்பம் ஆகும். "ஆப்ரேசியன்", "ஹமிட்டோ-செமாட்டிக்", "லிஸ்ராமிக்" (Hodge 1972), எரித்ரேசியன் (Tucker 1966.) என்ற பெயர்களாலும் இந்த மொழிக்குடும்பம் குறிப்பிடப்படுகின்றது. துணை மொழிக் குடும்பங்கள்ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் துணை மொழிக் குடும்பங்கள்:
ஒங்கோட்டா மொழி ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகக் கருதப்பட்டாலும், இக்குடும்பத்துள் இதனுடைய வகைப்படுத்தல் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்துவருகிறது (போதிய தரவுகள் இல்லாமையும் ஒரு காரணம்) முதல்நிலை-ஆபிரிக்க-ஆசிய மொழி எங்கே பேசப்பட்டது என்பதிலே பொதுவாக ஒத்த கருத்துக் கிடையாது; இக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறுபட்ட மொழிகள் பேசப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, பொதுவாக ஆபிரிக்காவாக (உம். டயகோனோப், பெந்தர்), குறிப்பாக எதியோப்பியாவாக, இருக்கலாம் என்ற கருத்து உண்டு. இதே வேளை மேற்குச் செங் கடல் மற்றும் சகாரா பகுதியும் முன்வைக்கப்பட்டுள்ளது (உம். எஹ்ரெட்). அலெக்சாண்டர் மிலிட்டரேவ் இவர்களுடைய தாய் நிலம் லேவண்ட் ஆக இருக்கலாம் எனக் கருதுகிறார். செமிட்டிக் மொழிகளே, ஆபிரிக்காவுக்கு வெளியே காணப்படும், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் ஒரே துணை மொழிக் குடும்பமாகும். எனினும் வரலாற்றுக் காலத்திலோ அல்லது வரலாற்றுக்கு மிக அணித்தான காலப்பகுதியிலோ சில செமிட்டிக் பேசும் மக்கள், தெற்கு அரேபியாவிலிருந்து மீண்டும் எதியோப்பியாவுக்கு வந்துள்ளார்கள், இதனால் சில நவீன எதியோப்பிய மொழிகள் (அம்ஹாரிக் போன்றவை) அடிப்படையான குஷிட்டிக் அல்லது ஒமோட்டிக் குழுக்களைச் சேராமல் செமிட்டிக்காக இருக்கின்றன. (முர்த்தொனென் (1967) போன்ற மிகச் சில ஆய்வாளர்கள் மேற்படி கருத்துடன் முரண்படுவதுடன், செமிட்டிக் எதியோப்பியாவில் உருவாகியிருக்கலாமெனக் கருதுகிறார்கள்). வகைப்படுத்தலின் வரலாறுஆபிரிக்க-ஆசிய etymologies க்கான சில முக்கிய மூலங்களில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன:
மேலும் காண்கமூலங்கள்
|
Portal di Ensiklopedia Dunia