ஆப்பிரிக்காவில் தமிழர்ஆப்ரிக்காவில் தமிழர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே வசித்து வருகின்றார்கள். குறிப்பாக 1850 களில் காலத்துவ பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாபிரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர்.[1][2] இக்காலத்தில் மொரிசியசு,[3] மடகாஸ்கர், ரீயூனியன் ஆகிய ஆப்பிரிக்க தீவுகளுக்கும் தமிழர்கள் வரவழைக்கப்பட்டனர். இங்கு தமிழர்களிடையே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரிசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும், எண்களும் இருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கு நைஜீரியா, கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுவர். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia