ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு ( Confederation of African Football, CAF, /ˈkæf/; French: Confédération Africaine de Football; அரபி: الإتحاد الأفريقي لكرة القدم) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தில் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். இக்கூட்டமைப்பு ஆப்பிரிக்க நாடுகளின் கால்பந்து சங்கங்களின் பிரதிநிதியாகும். இதுவே, ஆப்பிரிக்கக் கண்டத்தில் கால்பந்துப் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கும், பரிசுப் பணத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும், ஒளிபரப்பு உரிமைகளை விற்பதற்கும் பொறுப்பேற்கும் அமைப்பு. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு பிராந்திய கூட்டமைப்புகளில் இதுவும் ஒரு பெரிய கூட்டமைப்பாகும். யூஈஎஃப்ஏ-வினை விட மூன்று ஆண்டுகள் மட்டுமே இளைய அமைப்பாக இருப்பினும், அதன் உறுப்பு நாடுகளின் மற்றும் பிராந்திய கால்பந்துப் போட்டிகளின் தரம் மேம்படுத்தப்பட இன்னும் சில காலம் பிடிக்கும். பிரான்சில் நடத்தப்பட்ட 1998 ஃபிஃபா உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்க 5 இடங்கள் ஆப்பிரிக்கக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட 2010 ஃபிஃபா உலகக்கோப்பையில், போட்டியை நடத்தும் நாட்டையும் சேர்த்து 6 இடங்கள் ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. 2014 ஃபிஃபா உலகக்கோப்பைக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 8, 1957, அன்று ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. முதல் தலைமையகம் சூடான் நாட்டின் கார்தூம் நகரில் அமைந்திருந்தது; சில மாதங்களுக்குப் பிறகு கெய்ரோவுக்கு அருகில் மாற்றப்பட்டது. 1957-இல் தொடங்கப்பட்டபோது நான்கு நாடுகளின் கால்பந்துச் சங்கங்கள் உறுப்பு சங்கங்களாக இருந்தன. தற்போது 56 உறுப்பு சங்கங்கள் உள்ளன, அவற்றுள் 54 சங்கங்கள் முழு உறுப்பினர்கள் ஆகும். வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia