ஆமூர் மல்லன்ஆமூர் மல்லன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் மற்போரில் சிறந்தவனாவான். ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் 3 இடங்களில் சங்ககாலத்தில் இருந்ததைச் சங்கநூல்கள் காட்டுகின்றன. அவற்றுள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடகரையில் உள்ள முக்காவல்நாட்டு ஆமூரை ஆண்டவன் இந்த ஆமூர்மல்லன் என்று சிலர் கூறுவர். தற்போது மாமல்லபுரம் என வழங்கும்பகுதி ஆமூர் நாட்டில் இருந்ததென்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடுகின்றார் (புறம்.80) [1] இவன் மள்ளர்(மல்லர்) குலத்தைச் சேர்ந்த சோழரின் வம்சாவளியாகும். இந்த ஆமூர்மல்லன், போர்வை (இக்காலப் பேட்டைவாய்த்தலை) என்னும் ஊரை ஆண்டுகொண்டிருந்த சோழ இளவரசன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி என்பவனைத் தாக்கிய மற்போரில் தோல்வியுற்றான்.[1] இவர்களது போரைப்பற்றிச் சாத்தந்தையார்[2], நக்கண்ணையார்[3] ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia