ஆரக ஞானேந்திரா
ஆரக ஞானேந்திரா (Araga Jnanendra) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவர். இவர் கருநாடகாவின் தீர்த்தஹள்ளி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராவார். ஆரம்பகால வாழ்க்கைஇவர், 1953 ஆம் ஆண்டில் தீர்த்தஹள்ளி வட்டத்திலுள்ள அரகா கிராமமான ஹிசானாவில் பிறந்தார்.. எம்.எஸ் நினைவு பொதுப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்வதற்கு முன்பு கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர், சிவமோகாமா நிலக் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். [6] அரசியல் வாழ்க்கை1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இவர் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [7] 1986 ஆம் ஆண்டில் மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் கிருஷி ஸ்தாயி சமிதியின் தலைவராகவும் பணியாற்றினார். 1989 ல் இவர் மூன்றாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [7] இவர் இறுதியாக 1994 இல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றார். 1991 இல் தொடங்கி சிவமோகா பால் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றினார். 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [7] ஆனால் 2009 இல் இவர் தேர்தலில் தோற்றார். [8] 2009 ஆம் ஆண்டில் பத்ராவதி, மைசூர் காகித ஆலையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். [9] [10] 2018 ல் சட்டமன்றத் தேர்தலில் 22000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [11] [12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia