ஆர்கண்ட் விளக்கு![]() ![]() ஆர்கண்ட் விளக்கு (Argand lamp) 1780 ஆம் ஆண்டளவில் அய்மே ஆர்கண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு உரிமம் பெறப்பட்டது. இது அக்காலத்தில் இருந்த எண்ணெய் விளக்குகளிலும் கூடுதலான ஒளியை வழங்கி வீடுகளில் கிடைக்கக்கூடிய ஒளியின் அளவை மேம்படுத்தியது. இது சுமார் 6 தொடக்கம் 10 மெழுகுதிரிகள் வழங்கக்கூடிய ஒளியை வழங்கக்கூடியது. இது ஒரு வட்டவடிவில் அமைந்த திரியைக் கொண்டது. இது ஒன்றினுள் இன்னொன்றாக அமைந்த இரண்டு உலோக உருளைகளுக்கு இடையில் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், திரியின் நடுப்பகுதி ஊடாகவும், வெளிப்புறத்திலும் வளி சென்று வரக்கூடியதாக இருந்தது. அக்காலத்து முறையில் தேய்த்துச் செய்யப்பட்ட கண்ணாடி உருளை ஒன்றினால் திரி பக்கங்களில் மூடப்பட்டிருந்தது. இது சுவாலையை உறுதியாக எரியும்படி செய்ததுடன், சுவாலையைச் சுற்றிய காற்றோட்டத்தையும் மேம்படுத்தியது. இவ் விளக்கில் திமிங்கில எண்ணெய் போன்ற நீர்ம எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. தனியான கொள்கலன் ஒன்றிலிருந்து இந்த எண்ணெய் திரிக்கு வழங்கப்பட்டது. இவ்விளக்கின் வடிவமைப்பு கூடுதலான ஒளியைக் கொடுத்தது ஒருபுறம் இருக்க, எண்ணெயும், திரியும் முழு எரிதலுக்கு உள்ளாவதால் அடிக்கடி திரியை வெட்டிச் சுத்தம் செய்யவேண்டிய தேவையும் இருக்கவில்லை.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia