ஆர்கன் இசைக்கருவி![]() மேல்நாடுகளில் முக்கியமாக மாதா கோவில்களில் பயன்படுத்தம் இசை கருவி. இது அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் பல குழாய்களைக் கொண்டது. இக்குழாய்கள் ஒவ்வோன்றும் ஒரு சுரத்தை தோற்றுவிக்கும். கி.மு 2ஆம் நூற்றாண்டில் எளிய வடிவில் ஆர்கன் வழக்கத்தில் இருந்தது. இதில் காற்று நிறைந்த பெட்டியின் மேல் பல குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு துருத்தியின் உதவியால் பெட்டிக்குள் காற்று செலுத்தி, ஒலிக்குமாறு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி![]() 5ஆம் நூற்றாண்டில் எருசலேம் நகரில் ஆர்கன் 12 குழாய்களும், 15 துருத்திகளும் கொண்டிருந்தன. இதன் ஒலி ஒரு மைல் தொலைவுவரை கேட்கும். 7 ஆம் நூற்றாண்டில் கைகளால் இயக்கும் கட்டைகள் தவிர கால்களால் இயக்கப்பட்ட மிதிகளைக் கொண்டு, ஒரே நேரத்தில் பல சுரங்களை எழுப்பும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஜோசப் பூத்ஆர்கன் கட்டைகள் பெரிதாகவே, கட்டைகள் சிறியனவாகவும் எளிதில் இயக்க ஏற்றவாறு ஜோசப் பூத் வடிவமைத்தார். 19 ஆம் நூற்றாண்டில் மின்சாரத்தினால் இயங்கும் கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இம்முறையில் சாவி அழுத்தினால் ஒரு மின்காந்தம் இயங்கத்துவங்கி குழாய் ஒலிக்குமாறு செய்யப்பட்டுள்ளது. தற்கால ஆர்கன்4 கட்டைகளையும், ஒரு மிதி பலகையையும் கொண்டுள்ளது. கட்டைகளில் இருந்து 64 சுரங்களும் மிதிகளின் உதவியால் 32 சுரங்களையும் பெறலாம். ஒரே வகையான பண்புகளும், பல சுருதிகளும் உள்ள பல குழாய்கள் ஒரு தொகுதியில் அமைந்திருக்கும். ஒரு தொகுதியில் உள்ள குழாய்கள் அனைத்தும் ஒரு பிடியில் இயக்க ஏற்றவாறு அமைந்திருக்கும். ஆர்கன் சிறப்புகள்இங்கிலாந்தில் ஆல்பர்ட் ஹால் என்னும் அரங்கில் ஆர்கன் 9,723 குழாய்களையும், 146 குழாய் தொகுதிகளும் கொண்டது. லீவர்ப்பூல் மாதா கோயில் உள்ள ஆர்கன்13,236 குழாய்களை உடையது.[1][2][3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia