சர் ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (Sir Arthur Stanley Eddington), OM, FRS[2] (டிசம்பர் 28,1882 - நவம்பர் 22, 1944) ஒரு பிரித்தானிய வானியலாளரும் இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வானியற்பியலுக்குப் பெரும்பங்களிப்புச் செய்துள்ளார். இவர் ஓர் அறிவியலின் மெய்யியலாளரும் மக்களிடையே அறிவியல் பரப்பியவரும் ஆவார். விண்மீன்களின் இயற்கையான ஒளிர்மை வரம்பும் செறிபொருளின் அகந்திரள்வால் உருவாகும் கதிர்வீச்சும் இவர் பெயரால் வழங்குகின்றன.
இவர் தன் சார்பியல் கோட்பாட்டுக்காகப் பெயர் பெற்றவர். இவர் ஆங்கிலத்தில் ஐன்சுட்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்கிப் பல ஆங்கில மக்களுக்கான கட்டுரைகளை எழுதி விளக்கி அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் அறிவியல் தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்ததால் இங்கிலாந்தில் செருமனி நாட்டு அறிவியல் வளர்ச்சி அறியப்படவில்லை. இவர் 1919 மே 29 சூரிய ஒளிமறைப்பை நோக்கிட ஓர் அறிவியல் பயணத்தை மேற்கொண்டார். இது சார்பியல் கோட்பாட்டுக்கான முதல் சான்றாக விளங்கியது. இதனால் இவர் சார்பியல் கோட்பாட்டின் மாபெரும் மக்கள் பரப்புரையாளர் ஆனார்.
Stanley, Matthew. "An Expedition to Heal the Wounds of War: The 1919 Eclipse Expedition and Eddington as Quaker Adventurer." Isis 94 (2003): 57–89.
Stanley, Matthew. "So Simple a Thing as a Star: Jeans, Eddington, and the Growth of Astrophysical Phenomenology" in British Journal for the History of Science, 2007, 40: 53-82.