ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)
இரா. சுந்தர்ராஜன் (R. Sundarrajan) ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும், நகைச்சுவை நடிகரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். 1980கள் மற்றும் 1990களில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக முதன்மையாக செயல்பட்ட இவர், அதன் பிறகு ஒரு நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.[1] [2] [3] பயணங்கள் முடிவதில்லை (1982), வைதேகி காத்திருந்தாள் (1984),ராஜாதி ராஜா (1989) மற்றும் திருமதி பழனிச்சாமி (1992) போன்ற வெள்ளி விழா படங்களுக்காக சுந்தர்ராஜன் அறியப்படுகிறார். இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையின் போது, இவர் அடிக்கடி மூத்த நடிகர் மோகனுடன் இணைந்து பணியாற்றினார். இவர் தனது திரைவாழ்க்கையில் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் இலாபகரமான முயற்சிகளாக மாறின.[4] இவர் 14 இயக்குநர்களைக் கொண்ட சுயம்வரம் (1999) படத்திற்கு இணை இயக்குநராகப் பணியாற்றினார். இரசினிகாந்து, கமல்ஹாசன், விசயகாந்து, சத்யராஜ், அஜித் குமார், விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் திரைவெளியைப் பகிர்ந்துள்ளார் . தொழில்ஆர். சுந்தர்ராஜன் ஒரு நடிகராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும், புகழ்பெற்ற இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் திரையுலகில் மிகவும் பாராட்டப்பட்டவராகவும் கௌரவப் பெயர் பெற்றவராகவும் இருக்கிறார்.[5] 1981 ஆம் ஆண்டு ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் பின்னர் ஒரு வருடம் கழித்து, பயணங்கள் முடிவதில்லை (1982) மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது பயணங்கள் முடிவதில்லை படத்திற்காக நடிகர் மோகனுடன் இணைந்து பணியாற்றினார். மேலும் அந்த படம் திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது.[6] [7] தூங்காத கண்ணின்று ஒன்று (1983), சரணாலயம் (1983), நான் பாடும் பாடல் (1984), குங்குமச்சிமிழ் (1985) மற்றும் மெல்லத் திறந்தது கதவு (1986) உள்ளிட்ட படங்களின் மூலம் மோகனுடன் இவர் இணைந்து பணியாற்றினார். தூங்காத கண்ணின்று ஒன்று தவிர, மற்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.[8] [9] விஜயகாந்துடன் முதன்முதலில் இணைந்து வைதேகி காத்திருந்தாள் படத்தை இயக்கினார். இது இறுதியில் விஜயகாந்தின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[10] அதுவரை அதிரடி படங்களில் நடித்துவந்த விஜயகாந்தை காதல் படத்தில் “மென்மையான வேடத்தில்” நடிக்க சம்மதிக்க வைத்தார்.[11] பின்னர் ஆர். சுந்தர்ராஜன் தனது நீண்டகால உதவி இயக்குனராக இருந்த பாலு ஆனந்துடன் இணைந்து பாலு ஆனந்தின் அறிமுக இயக்கத்தில் நானே ராஜா நானே மந்திரி (1985) படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்தார்.[12] பின்னர் விஜயகாந்துடன் அம்மன் கோவில் கிழக்காலே (1986) படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் நடித்ததற்காக விஜயகாந்த் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.[6] 23 மணி நேரம் 58 நிமிடங்களுக்குள் படமாக்கப்பட்டு படமாக்கப்பட்ட சுயம்வரம் (1999) திரைப்படத்தை இயக்க உதவிய 14 இயக்குனர்களில் இவரும் ஒருவர். சுயம்வரம் திரைப்படம் ஒரு படத்தில் அதிக நட்சத்திரங்களை நடிக்க வைத்ததற்காகவும், உலகில் மிக விரைவாக தயாரிக்கப்பட்ட முழு நீள திரைப்படம் என்ற பெருமையுடனும் கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது. நடிகர்ஆர். சுந்தர்ராஜன் திரைப்படங்களில் நகைச்சுவை நடிப்பிற்காகவும் அறியப்படுகிறார். சூர்யவம்சம் (1997) படத்தில் இவரது நகைச்சுவை குறிப்பிடத்தக்கது.[13] காலம் மாறி போச்சு (1996) படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்திருந்தார்.[14] ஆர். சுந்தர்ராஜன் சித்திரையில் நிலாச்சோறு (2013) என்ற திரைப்படத்தை கடைசியாக இயக்கியிருந்தார்.[15] சொந்த வாழ்க்கைஆர். சுந்தர்ராஜன், இராஜேஸ்வரி என்பவரை முதலில் 1974 இல் மணந்தார். பின்னர் துர்கா என்பவரை இரண்டாவது மனைவியாக்கி கொண்டார். இவருக்கு அசோக், கார்த்திக் மற்றும் தீபக் என்ற மூன்று மகன்கள் பிறந்தனர். கார்த்திக் 2004 ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் இறந்தார்.[16] [17] தீபக் 2021 ஆம் ஆண்டு வெளியான அனபெல் சேதுபதி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[18] அசோக் தனது தந்தை இயக்கிய ‘சித்திரையில் நிலச்சோறு’ படத்தில் நடித்திருந்தார்.[19] திரை வாழ்க்கைஇயக்குநராக
நடிகராகமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்இணைய திரைப்பட தரவுதளத்தில் ஆர். சுந்தர்ராஜன் குறித்த பக்கம். |
Portal di Ensiklopedia Dunia